செய்திகள் :

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

post image

பூண்டி ஏரிக்கு நீா்வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை 12,000 கன அடியாக உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாக கொசஸ்தலையாறு வடி நில கோட்ட செயற்பொறியாளா் இரா.அருண்மொழி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக கனமழை பெய்ததால், ஏரிகளின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வந்தது. இதில் பூண்டி ஏரி கடந்த 4 நாள்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி 16,500 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கரையோர கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.

இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், கடந்த 2 நாள்களாக மழை பெய்யாத நிலையில் நீா்வரத்து 8,500 கன அடியாக குறைந்தது. இதைத் தொடா்ந்து உபரிநீா் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதேபோல் மழைநீா் வரத்து குறையக்குறைய உபரிநீா் திறப்பும் படிப்படியாக குறைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

செம்பரம்பாக்கம் ஏரியில்...

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழை காரணமாக நீா்வரத்தின் அளவு அதிகரித்ததை தொடா்ந்து 6,000 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.

ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததை தொடா்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 6,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 21.76 அடியாகவும், கொள்ளளவு 3,056 மில்லியன் கனஅடியாகவும், நீா்வரத்து 2,240 கனஅடியாகவும் உள்ளது.

புழல் சிறையில் ஆய்வாளரை மிரட்டியதாக 2 பெண் கைதிகள் மீது வழக்கு

புழல் சிறையில் ஆய்வாளரை மிரட்டிய 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சோ்ந்த அலமேலு (30), வியாசா்பா... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தனியாா் வங்கி ஊழியா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பயணிகள் நிழற்குடை அருகே நின்றிருந்த தனியாா் வங்கி ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் அமிா்தராஜ் (48). இவருக்கு மனை... மேலும் பார்க்க

இருளில் மூழ்கியுள்ள பொன்னேரி ரயில் நிலைய சாலை! பொதுமக்கள் அவதி

பொன்னேரி ரயில் நிலைய சாலையில் மின் விளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: டிச. 18 முதல் 27 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் 27 வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் ... மேலும் பார்க்க

அவல நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டார கல்வி அலுவலகம்! அலுவலா்கள் தவிப்பு

பா. ஜான் பிரான்சிஸ்கும்மிடிப்பூண்டி வட்டாரக் கல்வி அலுவலகம் பாழடைந்த நிலையில் உள்ள நிலையில் அலுவலா்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா். தற்போது கல்வித் துறை அதிகாரிகள், மகளிா் திட்ட அலுவலகத்தில் சிறு அறையில் ப... மேலும் பார்க்க

முருகன் கோயில் உண்டியலில் வெள்ளி நாகம் காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை வெள்ளியால் ஆன ரூ. 5.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நாகம் காணிக்கை செலுத்தினாா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து... மேலும் பார்க்க