செய்திகள் :

நெல்லை: அரசு வேலை வாங்கி தருவதாக 37 பேரிடம் ரூ.1.47 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைது; பின்னணி என்ன?

post image

தேனி ஊத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன். இவர் 2022ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். மார்த்தாண்டம் பகுதியில் வசித்துவந்த ஜேசுராஜசேகரனுடன், அவரது மனைவி எனக் கூறிக்கொண்டு கனகதுர்கா என்ற பெண் வசித்து வந்தார். இன்ஸ்பெக்டரின் வீட்டுக்கு அருகே லலிதா (43) என்ற பெண் ஒருவர், கணவர் மற்றும் 2 குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் அவருடன் வாழ்ந்த கனகதுர்கா ஆகியோர் லலிதாவின் குடும்பத்தினருடன் நட்பாகப் பழகி வந்தனர்.

இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரனும், கனகதுர்காவும் சேர்ந்து லலிதாவின் மகன் உள்ளிட்ட 37 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகம்

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "லலிதாவின் மகன் விஷால் கடந்த 2022ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார். அவர்கள் சோகத்திலிருந்த சமயத்தில் அவர்கள் வீட்டுக்குச் சென்ற கனகதுர்கா, தான் பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருவதாகவும், லலிதாவின் மகனுக்குத் திருநெல்வேலி அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். மேலும். 10 ஆசிரியர் பணியிடங்களும், 50 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் இருப்பதாகக் கூறியுள்ளார். இதை ஜேசுராஜசேகரனும் உண்மை எனச் சொல்லியுள்ளார்.

இதை நம்பி லலிதா தனது உறவினர்கள், நண்பர்களிடம் இந்த தகவலைக் கூறி 37 பேரிடமிருந்து சுமார் ஒரு கோடியே 47 லட்ச ரூபாய் வாங்கி காவல் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் மற்றும் கனகதுர்காவிடம் கொடுத்துள்ளனர். பணம் வாங்கிய பின்பு இன்ஸ்பெக்டர் மதுரைக்குப் பணியிட மாறுதலாகச் சென்றிருக்கிறார். வேலைக்குப் பணம் கொடுத்த நபர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டபோது அழைப்பைத் துண்டித்ததுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு போலி பணி நியமன ஆணையை வீட்டிற்குத் தபால் மூலம் ஆய்வாளர் ஜேசுராஜசேகரன் அனுப்பி உள்ளார். அது போலி பணி நியமன ஆணை எனத் தெரியவந்ததால், லலிதா இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டியிருக்கிறார். இதுகுறித்து கடந்த மாதம் லலிதா எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் குற்றப்பிரிவு காவல்துறைக்கு அனுப்பப்பட்டதை அடுத்து கனகதுர்கா என்ற முனியம்மா மற்றும் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன் ஆகியோர்மீது 5 பிரிவுகளில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரன்

இதற்கிடையே சாத்தான்குளம் காவல ஆய்வாளராகப் பணியிலிருந்த ஜேசுராஜசேகரனை, திருநெல்வேலி ஆயுதப்படைக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி., மூர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் இன்ஸெக்டர் ஜேசுராஜசேகரன் நேற்று (நவம்பர் 24) கைது செய்யப்பட்டார். விசாரணையில் கனகதுர்கா என்ற முனியம்மாவும் இன்ஸ்பெக்டர் ஜேசுராஜசேகரனுக்கும் மதுரையில் வைத்து பழக்கம் ஏற்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் பணியிடம் மாறுதலாகிச் செல்லும்போதெல்லாம் அவருடன் கனகதுர்காவும் சென்று இருவரும் சேர்ந்து வாழ்ந்ததும் தெரியவந்தது" என்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

தாராபுரம்: மகளுக்குப் பாலியல் தொல்லை; விழிப்புணர்வு முகாம் மூலம் வெளியான உண்மை; தந்தை கைது

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இணைந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் அண... மேலும் பார்க்க

`என்னைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்' - ஜிம் மாஸ்டர் கொடுத்த புகாரில் அதிரடி திருப்பம்

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய ஆண் நண்பர் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்? - நீதிபதி தலைமையில் விசாரணை!

புதுக்கோட்டை, பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் ஒன்றாக இருந்து கொண்டு போதை ஊசி பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங... மேலும் பார்க்க

16 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது... நீளும் பட்டியலால் அதிர்ச்சி!

வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் குடியேறி, கூலி தொழில் செய்து பிழைத்து வரும் தம்பதியின் 16 வயதான 10 வகுப்பு மகள் கடந்த 10 - ம் தேதி மாயமானார். காவல்துறையில் புகார் அளித்து தேடப்பட்டு வந்... மேலும் பார்க்க

உஷார்: UPI, PhonePe, PM Kisan Yojna செயலி மூலம் நடைபெறும் மோசடி - எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!

பணப் பரிவர்த்தனை என்பது அரிதாகி எல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனை கட்டத்துக்கு நகர்ந்து வருகிறோம். அதே நேரம், சமீப காலமாக சைபர் கிரைம் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து நடந்து வரும் ச... மேலும் பார்க்க

திருச்சி: காவிரி ஆற்றங்கரையில் இரண்டாவது முறையாக கிடைத்த ராக்கெட் லாஞ்சர்! - அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 - ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதுகுறித்து போலீஸார் விசாரணை செய்ததில், அது கொரிய போரின் போது அமெரிக்க ... மேலும் பார்க்க