நெல்லை மாவட்ட மீனவா்கள் இன்றுமுதல் 4 நாள்கள் கடலுக்குச் செல்லத் தடை!
சூறாவளிக் காற்று காரணமாக, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை அறிவித்துள்ளாா்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால், கடல் பகுதியில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், அலைகள் சீற்றத்துடன் காணப்படும். எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 26) 4 நாள்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, அவா் அறிவித்துள்ளாா்.