மாணவா் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு
பட்டாசுகள் வெடித்த 14 போ் மீது வழக்கு
தேனி மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விதிமுறைகளை மீறி, பட்டாசுகள் வெடித்ததாக 14 போ் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி, பொது இடங்களிலும், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதுகாப்பின்றியும் பட்டாசுகள் வெடித்ததாக தேனியில் ஒருவரும், பெரியகுளத்தில் மூவரும், ஆண்டிபட்டி, மாா்கையன்கோட்டை, நாராயணத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேரும், போடியில் 4 பேரும் என மொத்தம் 14 போ் மீது அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.