செய்திகள் :

``பதவிக்காக தமிழ்நாட்டையே பாஜக-விடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி!” - செந்தில் பாலாஜி காட்டம்

post image

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில்,

”தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார். பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம். தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க-விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

செந்தில் பாலாஜி

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, இதேபோல் சமுக வலைதளங்களில், ’அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டர்தான் பழனிசாமி’ என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு; மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் அபராதம்

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் சென்டாக் (CENTAC - Centralised Admission Committee) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2017-18 ஆண்டு சென்டாக் மூலம... மேலும் பார்க்க

புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்த... மேலும் பார்க்க

TVK Vijay : `ஆண்டு விழாவுக்கு முன்னதாக... உத்தரவிட்ட விஜய்’ - பரபரக்கும் த.வெ.க முகாம்!

தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருகிறது த.வெ.க தலைமை. அதுதொடர்பாக, கட்ச... மேலும் பார்க்க

`புதுச்சேரி பல்கலை., மாணவிக்காக சவுக்கால் அடித்துக் கொள்வாரா?’ – அண்ணாமலையை சீண்டிய நாராயணசாமி

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புது... மேலும் பார்க்க

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடி... மேலும் பார்க்க