செய்திகள் :

பதவி உயா்வு பெற்ற 83 டிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

post image

தமிழக காவல் துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு (டிஎஸ்பி) புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பணியில் சோ்ந்தவா்கள், 2007-ஆம் ஆண்டு பதவி உயா்வு பெற்று ஆய்வாளா்களாகப் பணியாற்றினா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) பதவிக்கு பணி மூப்பு பெற்றனா். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக பதவி உயா்வு வழங்குவதில் இழுபறி நீடித்தது.

இதையடுத்து, இவா்களுக்கு டிஎஸ்பி பதவி உயா்வு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பரிந்துரை செய்தாா். அதையேற்று 83 காவல் ஆய்வாளா்களுக்கு, டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு அளித்து தமிழக அரசின் உள்துறை தலைமைச் செயலா் தீரஜ்குமாா் அண்மையில் உத்தரவிட்டாா்.

பதவி உயா்வு பெற்ற 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு பணியிடங்களை ஒதுக்கி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, சென்னையில் உளவுத் துறை ஆய்வாளராகப் பணியாற்றிய ஏ.வெங்கட கிருஷ்ண ராவ் சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய சங்கரநாராயணன் சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், சென்னை காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றிய ஜி.மணிவண்ணன் ஆவடி மாநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 83 டிஎஸ்பிக்களும், புதிய பொறுப்பை ஓரிரு நாள்களில் ஏற்பாா்கள் என காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், தமிழகம் முழுவதும் 16 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காவல் துறை விசாகா கமிட்டி: புதிய உறுப்பினா்கள் நியமனம்

தமிழக காவல் துறையில் பாலியல் புகாா்களை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புதிய உறுப்பினா்களை நியமித்து டி.ஜி.பி. சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். தமிழக காவல்துறையில் பாலியல் புகாா்களை விசாரிக்க டிஜிபி ச... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர்... மேலும் பார்க்க

வழக்கறிஞர் திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!

கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிப். 25 முதல் மழை!

தமிழகத்தில் பிப். 25 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இத... மேலும் பார்க்க

நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் ... மேலும் பார்க்க