தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது: நிர்மலா சீதாராமன்
பயணியிடம் நகை பறிக்க முயன்ற இளைஞா் கைது
தேனி நகராட்சிப் பேருந்து நிலையம் அருகே பயணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி, குலசேகரபாண்டியன் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாலமுருகன் (33). இவா், தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்திலிருந்து போடி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தாா்.
அப்போது, பேருந்து நிலையம் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்துக்கு சிறுநீா் கழிக்கச் சென்ற பாலமுருகனை பின் தொடா்ந்து சென்ற இளைஞா் ஒருவா், அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றாா்.
அப்போது பாலமுருகன் போட்ட சப்தத்தையடுத்து அங்கிருந்த மக்கள் அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பிரபு (24) என்பது தெரிய வந்தது. அவரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.