செய்திகள் :

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக கிராம சபையில் 11ஆவது முறையாக தீர்மானம்!

post image

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் 11ஆவது முறையாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4800 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டன.

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட பகுதி மக்கள் தொடர்ந்து 915 நாள்களாக தொடர் போராட்டத்திலும் பல்வேறு விதங்களில் போராட்டங்களை முன்னெடுத்து திட்டத்தினை கைவிடக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்காக 4 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் நிலை எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு நிலம் எடுக்க முதல் கட்ட ஆய்வு மற்றும் கணெக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு அடுத்த மாதம் முதல் இழப்பீட்டு தொகை வழங்கும் பணி துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று 76 ஆவது குடியரசு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்தி!

அவ்வகையில் ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று குடியரசு நாள் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 11 வது முறையாக பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தினை கைவிடக் கோரி சிறப்பு தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் இத் திட்டத்தினை கைவிடக் கோரி மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் எனவும், மத்திய, மாநில அரசுகள் நீர்நிலைகள் மற்றும் விவசாயத்தை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம்: அரசாணை வெளியீடு!

சென்னை : தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி இன்று(ஜன. 27) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 4... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(ஜன. 27) ஆய்வு மேற்கொண்டார்.அதன் ஒருபகுதியாக ஒலக்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு. க. ஸ்டாலின்,... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்காளான வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை அடுத்த மாதம், பிப். 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு ... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க