பல்டி டிரைலர்!
நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவான பல்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம் தற்போது பல்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.
இதில், குமார் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் கபடி வீரராக நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
செப். 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். 4 கபடி வீரர்கள் சந்திக்கும் பிரச்னைகளும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: பன்னீருக்குப் பதில் சிக்கன்... ஆத்திரமடைந்த சாக்ஷி அகர்வால்!