செய்திகள் :

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

post image

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.

இவரை 1985-ம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன், 'ஆண்பாவம்' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். அவரது பாட்டியாக நடித்து பிரபலமானார் கருப்பாயி. சினிமா மூலம் இவரது நாட்டுப்புற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பரவத் தொடங்கியது.

கொல்லங்குடி கருப்பாயி
கொல்லங்குடி கருப்பாயி

ஆண்களை நம்பாதே, கபடி கபடி , கோபாலா கோபாலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா கலைமாமணி விருது வழங்கி கெளரவித்தார். ``'ஆண் பாவம்' நான் நடிச்ச முதல் படம். அதுக்கு அப்புறம் பல படங்கள் நடிச்சேன்.

இதில், சம்பளம் கொடுத்தவங்களைவிட  ஏமாத்தினவங்கதான்  அதிகம். ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்துட்டு, 'ஊருக்குப் போங்க அனுப்பி வைக்கிறோம்'னு சொல்வாங்க. நானும் எதிர்பார்த்து காத்திருப்பேன். ஒண்ணும் வராது. சினிமாவுல நடிக்கபோய் என்னை மொட்டையடிச்சு அனுப்பினதுதான் மிச்சம்.

எனக்குப் பிள்ளை இல்லைங்கிற குறையைப் போக்கி தலைமகனாக இப்பவும் இருக்கிறது நடிகர் பாண்டியராஜன்தான். சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காம இருக்காது. நான் சினிமாவுல நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்துல சேர்க்கலை.

கொல்லங்குடி கருப்பாயி
கொல்லங்குடி கருப்பாயி

பேரன் விஷால் வந்த பிறகுதான், உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்துச்சு. இன்னைக்கு நான் சாப்பிடுற சாப்பாடு, பேரான்டி விஷால் கொடுக்குற பணம்தான். என்னை வாழவைக்கிற சாமி அது. விஷால் கல்யாணத்துக்கு நான் போணும். அதுவரைக்கும் என் உசுரு இருக்கணும்." என 2018-ம் ஆண்டு விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி,"நான் எத்தனையோ ... மேலும் பார்க்க

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்ப... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க