செய்திகள் :

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

post image

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி, "நான் எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் சாதனைகள் என சொல்லக் கூடிய விஷயங்களைப் பார்த்த பிறகும் அடுத்து என்ன என்ற கேள்விதான் வரும்.

அட்லி
அட்லி

ஆனால் இந்த மேடையில் நான் முதன்முதலாக எமோஷனலாக உணர்கிறேன். நான் கல்லூரியில் உண்மையைப் பேசியதே இல்லை. ஆனால் இன்று உண்மையைப் பேசும் சூழ்நிலை. அதனால் பொய் சொன்னால் இரும்பிவிடுவேன்.

நான் இந்த காலேஜில் பயங்கரமான மாணவன் (இறுமுகிறார்). ஊருக்கு யாரா இருந்தாலும் வீட்டுக்கு அரசனா இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. அப்படித்தான் நம்ம அம்மா நம்மளை வீட்டுக்கு அரசனா பாத்திருப்பாங்க. என்னை இந்த காலேஜ் ஆரம்பத்தில் இருந்தே அரசனாகத்தான் பார்த்தது. 

பொதுவாக என்னுடைய படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க. நான் இன்னைக்கு ஒரு உண்மையை சொல்றேன். நான் என் வாழ்க்கையில நான் பார்த்த விஷயங்களைத்தான் எடுத்தேன். உதாரணமாக  ராயப்பன், என்னுடைய தலைவர் என் சான்ஸ்லர் ஜேப்பியார் சாரைப் பார்த்து இன்ஸ்பயராகி தான் எழுதினேன். 

காலேஜில் இருந்து போகும்போது எதையும் மிஸ் பண்ண கூடாது என நினைப்போம். ஆனால் நான் சொல்கிறேன் உங்களை மிஸ் பண்ணிடாதீங்க, உங்களுக்குள்ள இருக்கிற காலேஜ் பர்சனாலிட்டியை மிஸ் பண்ணிடாதீங்க. 

அட்லி - ப்ரியா

வாழ்க்கையில பெரிய வெற்றி நல்ல family man ஆக இருக்கிறதுதான். 1000 கோடி வசூல், இவரோட படம் பண்ணிட்டோம், அவரோட பண்ணிட்டோம் எதுவும் இல்ல. ரொம்ப ரொம்ப முக்கியமானது நல்ல family man ஆக இருக்கிறதுதான். என் அப்பா, அம்மா நான் ஒரு டைரக்டரா ஆகுற வரை என்ன பாத்துகிட்டாங்க, டைரக்டர்ல இருந்து இப்ப என்னவா இருக்கேனோ அதுக்கு என் மனைவி காரணம்.

அங்கிருந்து நான் ஒரு நல்ல மனிதனா மாற என் மகன் காரணம். இவங்க நான்குபேர் மட்டும் என் குடும்பம் இல்லை. என் அண்ணன் தளபதி விஜய். இன்னும் நிறைய பேர் இருக்காங்க. என் குடும்பம் ரொம்ப பெருசு. வாழ்க்கையில உங்க குடும்பத்தோட அளவை ரொம்ப பெருசாக்கிக்கங்க. ஒரு குட்டி கதையோட முடிக்கிறேன். ஒரு கோவிலில் உள்ளே சிலையும் வெளியே படிக்கட்டும் இருந்ததாம். எல்லோரும் படிக்கட்டை மிதித்து நடந்து சிலையை வணங்கினார்கள். 

அட்லி
அட்லி

கோவில் பூட்டியப் பிறகு படிக்கட்டு சிலையிடம் கேட்டதாம், "நீயும் கல்தான் நானும் கல்தான். ஏன் என்னைத் தாண்டி செல்கிறார்கள் உன்னை வணங்குகிறார்கள்?" அதற்கு சிலை சொன்னதாம், "உன்னை ரெண்டு பக்கமும் வெட்டி படிக்கட்டாக்கிவிட்டார்கள். என்னை ஆயிரம் பேர் வச்சு செதுக்கி சிலை ஆக்கியிருக்கிறார்கள். அதனால் எனக்கு கூடுதல் மரியாதை இருக்கத்தான் செய்யும்." இப்படி உங்களை இன்று நிறைய பேர் சுத்தி அடித்தால் நீங்கள் நாளைக்கு பெரிய ஆளாக வருவீர்கள்" என்று பேசியிருக்கிறார்.

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" - நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும... மேலும் பார்க்க

'நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்' - நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப்... மேலும் பார்க்க

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்ப... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க