செய்திகள் :

'நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்' - நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

post image

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

"முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர்.

யாருடைய சுதந்திரத்தையும் அவர் பறித்ததில்லை. ஒரு எளிமையான மனிதர். திரைத்துறையில் இருக்கக்கூடிய எத்தனையோ பேருக்கு நண்பர். என்னை நிறையப் பேரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது அவர்தான். நான் முதல் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்தவர் முத்துகுமார்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

யுவன் உடன் எப்போது இசையமைக்க உட்கார்ந்தாலும் அப்போது முத்துக்குமார் குறித்தப் பேச்சுக்கள் வந்துவிடும். இந்த விழா முத்துக்குமாரைத் தமிழகம் முழுவதும் கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக இருக்கும். இதுவரை சினிமாவில் நடந்திடாத ஒரு விழாவாக இருக்கும் இருக்கும். நா.முத்துக்குமாருக்காக எல்லோரும் ஒன்று கூடப் போகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" - நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும... மேலும் பார்க்க

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி,"நான் எத்தனையோ ... மேலும் பார்க்க

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்ப... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க