செய்திகள் :

டேவிட் வார்னரின் இடத்துக்கு மாற்று வீரர் இல்லை; முன்னாள் ஆஸி. கேப்டன் அதிருப்தி!

post image

டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரது இடத்துக்கு சரியான மாற்று வீரரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணிக்கான தொடக்க ஆட்டக்காரருக்கான தேடலில் இறங்கியது. இருப்பினும், இன்று வரை ஆஸ்திரேலிய அணியால் டேவிட் வார்னருக்கு மாற்று வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறலாம்.

இதையும் படிக்க: மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

டேவிட் வார்னருக்கு மாற்று வீரராக ஸ்டீவ் ஸ்மித், சாம் கான்ஸ்டாஸ் மற்றும் நாதன் மெக்ஸ்வீனி போன்ற வீரர்கள் முயற்சி செய்யப்பட்டனர். இந்த முயற்சி பெரிதாக கைகொடுக்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும், அவரால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன் மற்றும் கேமரூன் கிரீன் மூவரும் இணைந்து இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அவர்களால் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாதது தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் கேப்டன் அதிருப்தி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க மாற்று வீரர் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், சாம் கான்ஸ்டாஸுக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பளிக்காதது குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்று வரை நம்மால் அவருடைய இடத்துக்கான மாற்று வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேர்மையாக கூறவேண்டுமென்றால், தொடக்க ஆட்டக்காரருக்கானத் தேடலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கவில்லை என்றே கூறுவேன்.

இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் தோல்வி; ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றமா?

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக நன்றாக விளையாடி அரைசதம் எடுத்தபோதிலும், இலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாம் கான்ஸ்டாஸை மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என்றார்.

கடைசி டி20: 20 சிக்ஸர்கள் விளாசிய மே.இ.தீவுகள்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி அயர்லாந்தில் சுற்றுப்... மேலும் பார்க்க

கவாஜாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதா? ஆஸி. பயிற்சியாளர் பதில்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மெக்டொனால்டு பேசியுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க வீரரின் சிறந்த இன்னிங்ஸ்; மார்க்ரமுக்கு பீட்டர்சன் பாராட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய அய்டன் மார்க்ரமை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.ஆஸ்திர... மேலும் பார்க்க

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யபட்டுள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நிறைவடைந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

பாட கம்மின்ஸ் சாதனை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம்!

லார்ட்ஸ் நன்மதிப்பு பலகையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த ஆஸி. வீரராக பாட் கம்மின்ஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்க அணி வென்றது. 27 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் தோல்வி; ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளு... மேலும் பார்க்க