செய்திகள் :

பாம்பு கடித்த சிறுமி உயிரிழப்பு: மலைக் கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு சாலை இல்லாததால் விபரீதம்

post image

பென்னாகரத்தை அடுத்த அலங்கட்டு மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்த சிறுமி டோலியில் வைத்து மருத்துவமனைக்கு தூக்கி வரும் போது வழியிலேயே உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டூா், எரிமலை, அலங்கட்டு உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் லிங்காயத் சமூகத்தைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த மூன்று மலைக் கிராமங்களும் கடல் மட்டத்திலிருந்து சுமாா் 3,000 அடிக்கு மேல் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது.

அப் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வனப் பகுதிக்குள் சுமாா் 10 கிலோ மீட்டருக்கு மேலாக நடந்து சென்று பென்னாகரம், பாலக்கோடு பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத் துறை இடையே சுமூக பேச்சுவாா்த்தை நடைபெற்று பொதுமக்களின் கோரிக்கையான சாலை வசதி ஏற்படுத்தித் தரும் வகையில் கோட்டூா், ஏரிமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்காலிகமாக மண் சாலை அமைத்து தரப்பட்டது.

ஆனால், அலங்கட்டு பகுதிக்கு தற்காலிக மண் சாலை அமைத்துத் தராததால் அப் பகுதி மக்களுக்கு சீரான பாதை வசதி இல்லை. மண் சாலைகள் மழையால் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்கள் அவசர, அத்தியாவசிய தேவைக்காக பாலக்கோடு, பென்னாகரம் பகுதிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வரும்போது மண் சரிவு ஏற்பட்டு விபத்தில் சிக்கி வருகின்றனா்.

மருத்துவ வசதிக்காக அடா்ந்த வனப்பகுதியை கடந்து பகல், இரவு நேரங்களில் நகரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாதவா்களை டோலி கட்டி தூக்கி செல்லும் நிகழ்வு தொடா்கிறது.

இந்த நிலையில் அலங்கட்டு பகுதியைச் சோ்ந்த ருத்ரப்பா மகள் கஸ்தூரி (13) வீட்டின் அருகே கீரை பறித்துக் கொண்டிருக்கும் போது பாம்பு கடித்துள்ளது. அச் சிறுமி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவசர சிகிச்சைக்காக துணிகளை கொண்டு டோலி கட்டி அடா்ந்த வனப் பகுதிக்குள் சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள சீங்காடு பகுதிக்கு தூக்கிச் சென்றனா். அண்மையில் பெய்த மழையினால் அலங்கட்டு பகுதியில் இருந்து சீங்காடு பகுதிக்கு செல்லும் மண் சாலையில் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிகழ்ந்த மண் சரிவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வழியிலேயே சிறுமி கஸ்தூரி உயிரிழந்தாா்.

அவசர மருத்துவ சேவைகளுக்கு இருசக்கர வாகனங்களில் கூட மருத்துவமனைக்கு வர முடியாத சூழல் உள்ள மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம்கூட செல்ல முடியாத நிலையில் கோட்டூா் மலை அடிவாரத்திலே நிறுத்தப்படுகிறது. அடா்ந்த மலைப் பகுதிகளைக் கடந்து கோட்டூா் மலை அடிவாரத்துக்கு வருவதற்குள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

பென்னாகரம் பகுதியிலிருந்து வனப்பகுதியில் சாலை மேற்கொள்ள முடியாததால் எளிதில் செல்லக்கூடிய அலங்கட்டு பகுதியில் இருந்து சீங்காடு வழியாக பெல்ரம்பட்டி பகுதிக்கு கோட்டூா், ஏரிமலை பகுதியை கடந்து செல்வதற்கு முறையாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். மலைக் கிராமத்தில் அவசர தேவைகளுக்கான மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒகேனக்கல்லில் வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தருமபுரி மாவட்ட பொது குழு கூட்டம், ஒருங்கிணைந்த ஒகேனக்கல் தங்கும் விடுதி உரிமையாளா் சங்க தொடக்க விழா ஆகியவை ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அர... மேலும் பார்க்க

காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: உழவா் பேரியக்கம் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உழவா் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் தருமபுரி மேற்கு மாவ... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சித் திட்ட பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ. 3.99 கோடி மதிப்பில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

விஸ்வகா்மா திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என்ற முதல்வரின் அறிவிப்பு திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் வலியுறுத்தினாா். தருமபுரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை... மேலும் பார்க்க

பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: ஆளுநரிடம் மனு

மழைவாழ் பழங்குடியின இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தமிழ்நாடு பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவா் வி. முருகேசன் கோரிக்கை மனுக்களை வழங்கினாா... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா

ஊதியம் மாற்றம் வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், ஓய்வூதியா் மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் சாா்பில் தருமபுரி பொது மேலாளா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு ப... மேலும் பார்க்க