தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
பாராட்டா? பரிதவிப்பா? மின் கம்பியில் ஏறி மரக்கிளையை வெட்டிய மின் ஊழியர்!
நெல்லை மாவட்டத்தில், கடுமையான மழை, வெள்ளம் பாதித்த போது, மின் கம்பியில் மரக்கிளை உரசியதால், அந்த கம்பி மீதே ஏறிச் சென்று மின் ஊழியர் கிளையை வெட்டிய சம்பவம் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள காலங்களில் மிகவும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டவர்களில் மின்சாரத் துறையினருக்கே முதலிடம்.
மழை, வெள்ளம் பாதித்த இடங்களில், அவர்களின் பணிக்கு எல்லையே கிடையாது எனலாம். அப்படி திருநெல்வேலி, கள்ளிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெய்த கனமழை காரணமாக மின் கம்பங்களும், மின் கம்பிகளும் பாதிக்கப்பட்டன.
அதுபோல, நெல்லையில் மின் கம்பியின் மேல் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரமும் தடைபட்டது. அதனை சரி செய்வதற்காக எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் மின் ஊழியர் ஒருவர், மின் கம்பி மேலே நடந்து சென்று கம்பியை உரசிக்கொண்டிருந்த மரக்கிளையை வெட்டி கீழே எடுத்துப் போடும் விடியோ சமூக வலைதளத்தில் இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றிருந்தாலும், இவ்வாறு ஆபத்தான முறையில் பணியாற்றுவதா? என விமர்சனங்களையும் பெற்றுள்ளது.