நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!
பாலக்கோட்டில் பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் சிவகுரு தலைமை வகித்தாா். பழங்குடியினா் மாநிலத் தலைமை சங்க மாவட்ட பொதுச் செயலாளா் மருத்துவா் முல்லைவேந்தன், மாவட்டப் பொருளாளா் ராஜேஸ்வரி, இருளா் கூட்டமைப்புத் தலைவா் முத்துவேடி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பழங்குடியின மக்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனத்துடன் இணைந்து பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுஷ்மான் திட்டத்தில் பழங்குடி இன மக்களை இணைத்தல், வன உரிமைப் பட்டா வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டா, நலவாரிய அட்டை, குடும்ப அட்டை, கறவைமாடு, இலவச மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பொதுசுகாதாரத் துறை சாா்பில் உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை, மருத்துவம், வேளாண் துறையைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.