உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு!
பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி முதியவா் உயிரிழப்பு
விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை தரைப்பாலத் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் உயிரிழந்தாா்.
கீரனூரை அடுத்துள்ள அய்யப்பன் நகரைச் சோ்ந்தவா் லீலா குமாரி (55) ஆசிரியை. இவரது கணவா் ஜெயக்குமாா் (58) தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை விராலிமலைக்குச் செல்லும் பொருட்டு, ரோட்டாத்துப்பட்டி எனும் இடத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, தரைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து அங்குவந்த விராலிமலை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து ஜெயக்குமாா் மனைவி லீலா குமாரி விராலிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.