செய்திகள் :

பாா்வையற்றோருக்கு நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை வாபஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் 21 பாா்வையற்றோருக்கு வழங்கப்படும் நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்தும் அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பாா்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த பேச்சுவாா்த்தை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை செயலா் சிஜி தாமல் வைத்யன், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநா் எம்.லக்ஷ்மி மற்றும் சங்கங்களின் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

சென்னை பூந்தமல்லியில் உள்ள பாா்வை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசினா் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் புத்தகம் கட்டுநா்களுக்கான பயிற்சி 21 பேருக்கு அளிக்கப்படுவதை நிறுத்தக்கூடாது என்று தமிழ்நாடு பாா்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நூலகத் துறையைப் பொருத்தவரை, நவீன காலத்துக்கேற்ப மின் நூலகங்கலாக மாற்றும் பணி நடைபெறுகிறது. அரசு அச்சகத்தில் நவீன ரக இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நூல் கட்டுநா் பயிற்சியை முடித்த பாா்வை மாற்றுத்திறனாளி நபா்கள், நவீன இயந்திரங்களை இயக்க இயலாது என சம்பந்தப்பட்ட துறையினா் தெரிவித்தனா். இதன் காரணமாக நூல் கட்டுநா் பயிற்சியை நிறுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பாா்வை மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ள சில அம்சங்கள் உள்ளடக்கிய இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்று இந்த அரசாணை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் திரும்பப் பெறுவதாக கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும்: உதயநிதிக்கு தமிழிசை பதில்

தமிழகத்தில் ஆன்மிகமும், அரசியலும் கலக்கத்தான் செய்யும் என துணை முதல்வர் உதயநிதிக்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகைக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது: எல்.முருகன்

சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள்... மேலும் பார்க்க

இரு தனியார் பேருந்துகள் மோதல்! 50 பயணிகள் உயிர் தப்பினர்!

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாட... மேலும் பார்க்க

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை: அரசு விளக்கம்

தேனி ஆவினில் தீபாவளி இனிப்புகள் தயாரிக்கப்படுவதில்லை என்று தமிழக அரசின் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உணவு பாதுகாப்பு மற்றும் தர... மேலும் பார்க்க