செய்திகள் :

பிரதமரின் நிகழ்ச்சிக்கு முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் முழுவதும் பெண்கள்!

post image

முதல்முறையாக பிரதமர் மோடி கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் ஈடுபடவுள்ளனர்.

உலக மகளிர் நாளையொட்டி குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நாளை(மார்ச் 8) நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பெண்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார்.

குஜராத்திற்கு பிரதமர் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.

பிரதமர் மோடி வருகை முதல் அவர் கலந்துகொள்ளும் விழா நிறைவுபெறும் வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதுகுறித்து அவர் கூறுகையில், 'உலக மகளிர் நாளையொட்டி, இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் காவல்துறை ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. அதன்படி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் விழாவுக்கு முழுவதுமாக பெண் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது.

2,100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பி, 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவரும் பெண்கள்" என்றார்.

குஜராத் மற்றும் தாத்ரா நகர் ஹவேலிக்கு பிரதமர் மோடி இருநாள் (மார்ச் 8,9) பயணமாக செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க

பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கட... மேலும் பார்க்க

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஹிந்தி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிய ராகவேந்திரா... மேலும் பார்க்க