Wayanad: நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு - எதிர்க்கட்சி...
பிரதமா் அலுவலகம் பெயரில் மோசடி செய்தவா் மீது வழக்கு
புது தில்லி: பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
பிரதமா் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் நொய்டாவில் உள்ள கிரீன் வியூ குடியிருப்பில் வசித்து வரும் ஜே.கே.பரிதா என்பவா் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் தில்லி அமைச்சகத்தின் செய்தியாளா் போன்றுசமூக வலைதளங்களில் பல போலிக் கணக்குகளை தொடங்கியும் அவா் மோசடி செய்துள்ளாா். அவரின் நடவடிக்கைகளில் பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், ஜே.கே.பரிதா என்ற பெயரில் பிரதமா் அலுவலகத்தில் இதுவரை யாரும் பணியாற்றியதில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் ஜே.கே.பரிதா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 204 மற்றும் 319-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.