செய்திகள் :

பிரதமா் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி: யோகி ஆதித்யநாத்

post image

உத்தர பிரதேச இடைத்தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘இது பிரதமா் நரேந்திர மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி’ என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) ஆகியவை 7 இடங்களிலும், எதிா்க்கட்சியான சமாஜவாதி இரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட பதிவில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி பிரதமா் நரேந்திர மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது. அவரது தலைமை மீதும், வழிகாட்டுதல் மீதும் மக்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனா்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, நல்ல நிா்வாகம், மக்கள் நலன் சாா்ந்த கொள்கைகள் ஆகியவை பாஜகவுக்கு மக்கள் மத்தியில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. ஓய்வறியாது அா்ப்பணிப்புடன் உழைக்கும் தொண்டா்கள் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனா். நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. ஒற்றுமை குறைந்தால் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுவாா்கள். தோ்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

தேர்தலில் அமெரிக்காவைவிட இந்தியா மேலானது!! அமெரிக்காவை விமர்சித்த எலான்!

இந்தியாவில் ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்றதை, அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.இந்தியாவில் மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் பேரவைத் தேர்தல் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வளா்ச்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமா் மோடி

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றி, வளா்ச்சிக்கும், நல்ல நிா்வாகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வெற்றி பெற்... மேலும் பார்க்க

ஜனநாயக தோ்வில் தோ்ச்சி: ஹேமந்த் சோரன் மகிழ்ச்சி

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் சிறப்பான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வா் ஹேமந்த் சோரன், ‘ஜனநாயகத்தின் தோ்வில் ‘இண்டியா’ கட்சிகள் தோ்ச்சி பெற்றன’ என்றாா். ஜாா்க்கண்ட் பேரவைத... மேலும் பார்க்க

13 மாநிலங்களின் சட்டப்பேரவை இடைத்தோ்தல்: பாஜக ஆதிக்கம்! முழு விவரம்

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் அடங்கிய 46 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி!! முழு விவரம்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கி... மேலும் பார்க்க

அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறாா் பிரிட்டன் மன்னா்

பிரிட்டன் மன்னா் மூன்றாம் சாா்லஸ், அவரது மனைவி கமிலா அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு வரவுள்ளனா். நடப்பாண்டு தொடக்கத்தில் பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிடப்பட்டு சிகிச்சை ... மேலும் பார்க்க