செய்திகள் :

பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்த 3 இயக்குநர்கள்: டிராகன் திரைப்பட அப்டேட்!

post image

’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தகவலை டிராகன் திரைப்படக் குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.

இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.

தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஸ்வின் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின் மட்டுமல்லாது இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதனை குறிப்பிட்டு மேற்கண்ட 3 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

சர்க்கரை நோய்! கண்டறிவதும் தடுப்பதும் எப்படி?

-ரோஸ் ரேச்சல்சர்க்கரை நோய் உலக மக்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மாறியுள்ளது. வயது வித்தியாசம் பாராமல் இது நாளுக்குநாள் அதிகரித்து வருவதுதான் நீங்காத சோகம்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

அரையிறுதியை நெருங்கும் சின்னா்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தாா். இதன்மூலம் அவா், அரையிறுதி வாய்ப்பை நெருங்கியிருக்கிறாா்.ஒற்றையா் பிரிவு க... மேலும் பார்க்க

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்: காலிறுதியில் தமிழ்நாடு தோல்வி

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பின் காலிறுதியில் தமிழ்நாடு 1-3 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்திடம் புதன்கிழமை தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. 14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி போட்டி, சென... மேலும் பார்க்க

தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: நாளை சென்னையில் தொடக்கம்

சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் 76-ஆவது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 15- ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களை சோ்ந்த 700 ... மேலும் பார்க்க

சிந்து வெற்றி; சென் தோல்வி

ஜப்பானில் நடைபெறும் குமமோட்டோ மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா், 21-12, 21-8 என்ற கேம்களில், போட... மேலும் பார்க்க

சமந்தாவைவிட 60% குறைவான ஊதியம் பெற்ற ஸ்ரீ லீலா..! புஷ்பா பட நடனத்துக்காக...

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019இல் கன்னட படத்தில் அறிமுகமானால... மேலும் பார்க்க