செய்திகள் :

பிளாக் காஃபியால் சலசலப்பு: ``நான் உதாரணமானதில் மகிழ்ச்சி"- முற்றுப்புள்ளி வைத்த நடிகர் வருண் தவான்!

post image

இயக்குநர் ஏ. காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வருண் தவான்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில், உடலைப் பாதுகாப்பது குறித்து நெறியாளர் கேட்ட கேள்விக்கு, நடிகர் வருண் தவான் பதில் கூறுகையில், ``காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காஃபி குடிக்காதீர்கள். அது குரல், செரிமானப் பிரச்னையை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னை இல்லாதவர்களுக்கும் தொடர்ந்து குடிப்பதால் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எதாவது சாப்பிட்டுவிட்டு பிளாக் காஃபி குடியுங்கள்." என்று கூறினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், சமூக வலைதளங்களில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் பிரசாந்த் தேசாய், வருண் தவாணின் பேச்சுக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ``நான் 15 ஆண்டுகளாக வெறும் வயிற்றில் பிளாக் காஃபி குடித்து வருகிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லாமல்தான் இருக்கிறேன். வருண் தவான் குறிப்பிட்டது எல்லோருக்கும் நடக்கும் என்பதில்லை. நம் உடல் என்பது கைரேகை போல ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. ஒருவருக்கு ஏற்படும் அதே விளைவு மற்றவருக்கு ஏற்படும் என்பது சாத்தியமில்லை. எனவே, உங்களின் உடலுக்கு என்ன தேவையோ அதை பரிசோதித்து, ஆலோசனையுடன் செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

வருண் தவான்

இந்த வீடியோவுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக வருண் தவான், ``நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பிளாக் காஃபி உங்களை பாதிக்காதது குறித்து மிகவும் மகிழ்ச்சி. ஆரோக்கியமாகவும், மிகவும் பொருத்தமாகவும் இருக்கிறீர்கள். மேலும், இந்தப் புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்த நான் உதாரணமானதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.

Shyam Benegal: `லெஜண்டுக்கு அஞ்சலி' - 5 தேசிய விருதுகள் வென்ற ஒரே இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்!

பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் இன்று (23.12.2024) தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார். மும்பையில் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று மாலை 6:30 மணியளவில் உயிரிழந்ததாக அ... மேலும் பார்க்க

Radhika Apte: ராதிகா ஆப்தேவின் கர்ப்பக்கால போட்டோ ஷூட்; விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் ராதிகா ஆப்தே.தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி எனப் பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். குறிப்பாக '... மேலும் பார்க்க

Atlee:` நான் எங்கு? எப்போது? இதில் தோற்றம் குறித்துப் பேசினேன்'-விமர்சனங்களுக்கு கபில் ஷர்மா பதில்

அட்லி குறித்தான பேச்சுதான் சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பி இருக்கிறது.அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கிற பாலிவுட் திரைப்படமான `பேபி ஜான்' கிறிஸ்துமஸ் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்ப... மேலும் பார்க்க

Atlee: "தோற்றத்த பார்த்து எடை போடாதிங்க..." - அட்லி கொடுத்த `நச்' பதில்

பாலிவுட் திரையுலகில் நடிகர்களைக் கலாய்ப்பது என்பது சாதாரணமாக நடந்து வரும் விஷயம். நிகழ்ச்சிகளில், நேர்காணல்களில் போகிற போக்கில் சர்ச்சைகளுக்காகவே சில கேள்விகளை, ட்ரோல்களை செய்வது நீண்ட நாள்களாகவே அங்க... மேலும் பார்க்க

PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நடிகர் சைஃப் அலிகான்!

பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர் ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள வேண்டும் என ராஜ் கபூரின் குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தி... மேலும் பார்க்க

Allu Arjun: ``எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்க முடியாது.." -அல்லு அர்ஜுன் கைது குறித்து வருண் தவான்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் பிரீமியர் ஷோ பார்க்க, கடந்த டிச.4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் மனைவி ரேவதி உயிரிழந்த சம்பவம்... மேலும் பார்க்க