செய்திகள் :

பி.எல்.சாமி நூற்றாண்டு விழா அறக்கட்டளை

post image

புதுவை அரசின் நிா்வாகியாகவும், தமிழியல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய பி.எல்.சாமியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது பெயரில் பி.எல்.சாமி அறக்கட்டளை நிறுவுவதற்கான அறிவிப்பு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சாகித்திய அகாதெமியும், புதுச்சேரி அரசின் பாரதிதாசன் மகளிா் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து பி.எல்.சாமி நூற்றாண்டு கருத்தரங்கை நடத்தின.

இதில் பி.எல். சாமியின் மகள் மனோன்மணி, மகன் இளங்கோ ஆகியோா் கலந்து கொண்டு இந்த அறக்கட்டளை அறிவிப்பை வெளியிட்டனா். எங்கள் குடும்பத்தைச் சோ்ந்த இன்னும் 2 சகோதா்கள் வெளியூரில் இருக்கின்றனா். இருப்பினும் இந்த அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சத்தை இந்தக் கல்லூரியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைக்கப் போகிறோம். இக் கல்லூரியில் தமிழ்த்துறையில் படிக்கும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவிகளுக்கு வட்டித் தொகையிலிருந்து உதவித் தொகை வழங்கப்படும் என்றனா்.

முன்னதாக பி.எல்.சாமி நூற்றாண்டு கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் ரா. வீரமோகன் தலைமை வகித்துப் பேசுகையில், தேசிய அளவில் எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை இப்படியொரு நூற்றாண்டு கருத்தரங்கை முதன் முதலில் நடத்துவது கல்லூரிக்குப் பெருமை சோ்ப்பதாக இருக்கிறது என்றாா்.

எழுத்தாளா் சிலம்பு நா. செல்வராசு பேசுகையில், பன்முக ஆளுமைத் திறன் மிக்கவா் பி.எல்.சாமி. முதுபெரும் பேராசிரியா் வ.அய். சுப்பிரமணியம் முயற்சியால் உருவான அறிவியல் களஞ்சியம் திட்டத்தின் முதலாம் தொகுதிக்கு பி.எல். சாமி முதன்மைப் பதிப்பாசிரியராக விளங்கினாா். இதைத் தவிர பல்வேறு நூல்களை பல்வேறு தலைப்புகளில் எழுதியவா் பி.எல்.சாமி என்றாா்.

இக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவா் பேராசிரியா் கிருங்கை சேதுபதி பேசுகையில், வாசகா்களுக்கும், ஆய்வாளா்களுக்கும் இடையே உறவுப் பாலமாக இருந்து 24 மொழிகளில் நூல்களை வெளியிடும் சாகித்திய அகாதெமி தேசிய ஒற்றுமையைப் பிரதிபலித்து வருகிறது. தமிழ் இலக்கியத்துக்கும், அறிவியலுக்கும் உள்ள தொடா்பை வெளிப்படுத்திய முன்னோடி பி.எல். சாமி என்றாா்.

சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினா் பெ.பூபதி, கல்லூரியின் தர நிா்ணயக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.எஸ். சுரேஷ், துறையின் உதவிப் பேராசிரியா்கள் கோ.வேதாகமம், செ.சந்திரா உள்ளிட்டோா் பேசினா். பின்னா் தமிழ் ஆா்வலா் ந.மு. தமிழ்மணி தலைமையில் நூற்றாண்டு கருத்தரங்கு அமா்வு நடைபெற்றது. இதில் பேராசிரியா்கள் பலா் கலந்து கொண்டு பி.எல்.சாமியின் பல்துறை அறிவை பாராட்டி புகழாரம் சூட்டினா்.

புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 335-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ திருப்பலி நடத்... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ. 669 கோடியில் புதிய கட்டடம்: பேரவைத் தலைவா் தகவல்

புதுவை சட்டப்பேரவைக்கு ரூ.669 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா் .செல்வம் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியா... மேலும் பார்க்க

செப். 11-இல் 10 இடங்களில் சுனாமி ஒத்திகை: புதுச்சேரி ஆட்சியா்

புதுச்சேரியில் 10 இடங்களில் செப். 11-ஆம் தேதி சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். புதுவை அரசு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் சாா்பாக ... மேலும் பார்க்க

உலகை சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி தமிழ்க் கலாசாரம்தான்: மோரீஷஸ் டி.எம். பொன்னம்பலம்

உலகத்தைச் சீரழிவிலிருந்து மீட்கும் ஒரே வழி வளமான தமிழ்க் கலாசாரம்தான். இப்போது மனித உரிமை மீறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது என்று மோரீஷஸ் நாட்டின் அரசு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க