செய்திகள் :

புதுகை மீனவர்கள் 11 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை! - இலங்கை நீதிமன்றம்

post image

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 11 புதுக்கோட்டை மீனவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் முதல்முறையாக கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக். 9 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சென்ற 11 பேரையும், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 பேரையும் என மொத்தம் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுடன் 3 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

இதில், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரவீந்தர் (42), உலகநாதன் (38), அருள்நாதன் (29), வைத்தியநாதன் (30), குமரேசன் (37), மதன் (27), மகேந்திரன் (20), முனிவேல் (66), விஜய் (31), கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சிவகுமார் (28), கருப்பசாமி (26) ஆகிய 11 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுடன் சென்றிருந்த விக்னேஷ் (18), மகேஷ் (55), சூரியா (23), சூரியபிரகாஷ் (25) ஆகிய 4 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே ஒரு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் முதல் முறையாகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

நாகை - இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தம்!

வானிலை காரணமாக நாகை - இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாகை துறைமுகம் - இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தே... மேலும் பார்க்க

தில்லி புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு!

தில்லியின் புதிய மேயராக ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார்.பட்டியலினத்தைச் சேர்ந்த மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில், மாநகர... மேலும் பார்க்க

புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள்!

சென்னையில் இன்றுமுதல்(நவ. 14) புதிதாக 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஏற்கெனவே சென்னை ர... மேலும் பார்க்க

காவலர் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவலர் வாகனத்தில் மது அருந்திய விடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் குற்றச் செய... மேலும் பார்க்க

'குழந்தைகளின் கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்!' -முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.குழந்தைகள் நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றன... மேலும் பார்க்க

பாபா சித்திக் இறந்துவிட்டாரா? உறுதி செய்ய மருத்துவமனையில் காத்திருந்த கொலையாளிகள்!

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள், அவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொள்ள, கூட்டதுடன் கூட்டமாக நின்றிருத்தாக தகவல் வெளியாகியிருக்கிறது... மேலும் பார்க்க