செய்திகள் :

புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத்தின் பின்னணி என்ன?

post image

சாடும் நாராயணசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ``புதுச்சேரியில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்கள். புதுச்சேரி மாநில வரலாற்றில் முதல் முறையாக ரமேஷ், பாலாஜி, ஜான்சன் என்ற மூன்று பி.சி.எஸ் (Provincial Civil Service) அதிகாரிகள் ஊழலில் சிக்கி, சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இப்படியான உயரதிகாரிகள் மட்டுமல்ல, சில அரசு ஊழியர்களும் ஊழல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

நாராயணசாமி

அந்த வகையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் ரவிக்குமார் என்பவரது வீட்டில், சி.பி.ஐ அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது ரவிக்குமார் தன்னுடைய பெயரிலும், மனைவி பிரியதர்ஷினி மற்றும் மாமியார் குமுதம் பெயரிலும், ரூ.106 கோடி சொத்துகள் சேர்த்திருப்பதாக வழக்கு பதிவு செய்திருக்கும் சி.பி.ஐ, அந்த பட்டியலையும் எஃப்.ஐ.ஆரில் இணைத்திருக்கிறது.

இந்த ரவிக்குமாரிடம் பல அமைச்சர்கள் தொடர்பில் இருக்கின்றனர். அதனால்தான் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலின்போது, இந்த ரவிக்குமாரின் வீட்டில் அதிகாரிகள் இரண்டு முறை சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சென்ற அமைச்சர் நமச்சிவாயம், அந்த அதிகாரிகளிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதிலிருந்தே இருவருக்கும் எந்த அளவுக்கு தொடர்பிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது” என்றார் அதிரடியாக.

அதன் தொடர்ச்சியாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், ``முன்னாள் முதல்வர் நாராயணசாமி என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் என்னுடைய பகுதியில் பிரச்னை நடக்கிறது என்று என்னுடைய கவனத்திற்கு வந்ததால், அங்கு சென்று அதை சரி செய்தேனே தவிர, எந்த குற்றவாளிகளுக்கும் ஆதரவாக நான் ஒரு போதும் இருந்ததில்லை. அந்த ரவிக்குமார் என்பவர் குற்றம் செய்திருந்தால், சம்மந்தப்பட்ட துறை அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகிறது. அவர் ரூ.106 கோடி சொத்து சேர்த்திருந்தால், குற்றம் செய்திருந்தால், அதற்கான முகாந்திரம் இருந்தால் வருமான வரித்துறையும், சி.பி.ஐ-யும் அதற்கான நடவடிக்கையை எடுக்கப் போகின்றன.

நாராயணசாமியை அவருடைய கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அதனால் தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்வதற்காக, நானும் ரௌடிதான் என்று இப்படியான அறிக்கைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருமானத்துக்கு அதிகமாக 106% சதவிகிதம் சொத்துகள் சேர்த்திருப்பதாகத்தான் சி.பி.ஐ-யின் அறிக்கையில் இருக்கிறதே தவிர, ரூ.106 கோடி என்று இல்லை.

அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்

ஆனால் நாராயணசாமி அதை ரூ.106 கோடி என்று கூறுகிறார். புதுச்சேரி சிறிய மாநிலம். அனைவரையும் அனைவருக்கும் தெரியும். அப்படியான நிலையில் இவர் அவருடைய பினாமி, அவர் இவருடைய பினாமி என்று இணைத்துப் பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை. நாராயணசாமி அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ரவிக்குமார் என்னுடைய பினாமி என்பதை நாராயணசாமி நிரூபித்துவிட்டால், நான் இந்த அரசியலை விட்டே விலகுகிறேன். அரசியல் ரீதியாக நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்த வளர்ச்சி நாராயணசாமியின் கண்களை உறுத்துகிறது. அரசியலில் இருப்பதற்காக நான் வெளிநாடு செல்லக் கூடாதா ? நான் எந்த நாட்டுக்கு சென்றாலும், அரசின் முன் அனுமதி பெற்று முறையாகத்தான் செல்கிறேன். சட்டத்தை மீறி நான் எதையும் செய்யவில்லை. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், ப... மேலும் பார்க்க

TVK: `எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த்...' - நடிகர்களின் அரசியல் பிளாஷ்பேக்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. நம் நாட்டில் அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்ததாகவே இருந்துவருகிற... மேலும் பார்க்க

TVK: இறுதிக்கட்டத்தில் தவெக மாநாட்டு வேலைகள்... பார்வையிட்ட புஸ்ஸி ஆனந்த் | Photo Album

தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்டு வேலைகள்தவெக மாநாட்... மேலும் பார்க்க

`நீங்கள் துணை முதல்வரா.. தமிழின எதிர்ப்பாளரா? உங்கள் பதவி பறிக்கப்படுமா?'- உதயநிதிக்கு வானதி கேள்வி

தமிழக அரசு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நீங்கள் துணை முதல்வரா? அல்லது தமிழின எதிர்ப்பாளரா? என உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீ... மேலும் பார்க்க

TVK: தவெக மாநாட்டில் அஞ்சலையம்மாள் கட் அவுட்; யார் இந்த `தென்னாட்டு ஜான்சி ராணி'?

தனது திரைப்படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசியும், மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனது ரசிகர் மன்றங்களால் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தான் அரசியலுக்கு வருவதை வெளி... மேலும் பார்க்க

`வேலுமணிக்கு ஒரு நியாயம்... வைத்திக்கு ஒரு நியாயமா..?' - ஓ.பி.எஸ் மீது கடுப்பில் ஆதரவாளர்கள்

திடீர் ரெய்டு..!வைத்திலிங்கம்ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின்மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவை மட்டுமல்லாமல், அ.தி.மு.க வட்டாரங்களை மொத்தமாகவே ஒ... மேலும் பார்க்க