செய்திகள் :

`புதுச்சேரி பல்கலை., மாணவிக்காக சவுக்கால் அடித்துக் கொள்வாரா?’ – அண்ணாமலையை சீண்டிய நாராயணசாமி

post image

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வெளிநபர்கள் நுழைந்து மாணவியை தாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட மாணவியை புகார் கொடுக்க கூடாது என்று மிரட்டியிருக்கின்றனர். அந்த சம்பவத்தை என்.ஆர்.காங்கிரஸ் அரசு மூடி மறைக்க நினைக்கிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தபோது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சவுக்கால் அடித்துக் கொண்டார்.

அண்ணாமலை சாட்டையடி

தற்போது புதுச்சேரியில் நடைபெற்றிருக்கும் இந்த சம்பவத்திற்காக அவர் சவுக்கால் அடித்துக் கொள்வாரா ? தமிழகத்துக்கு ஒரு நீதி… புதுச்சேரிக்கு ஒரு நீதியா ? பெண்கள் வன்கொடுமை குறித்துப் பேச பா.ஜ.க-வுக்கு எந்த தகுதியும் இல்லை. அதேபோல புதுச்சேரி மக்கள் குறித்து முதல்வர் ரங்கசாமிக்கு எந்த அக்கறையும் இல்லை. புதுச்சேரியின் 15 லட்சம் மக்கள் தொகையில், 7.5 லட்சம் பேருக்கு முதல்வர் ரங்கசாமி மதுபானக் கடைக்கு அனுமதி வழங்கப் போகிறார். சங்கராபரணி ஆற்றுக்கு பதிலாக சாராய ஆற்றை ஓட வைக்க நினைக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஏற்கெனவே 6 மதுபான தொழிற்சாலைகள் இருக்கும் புதுச்சேரியில் இன்னும் 8 புதிய ஆலைகளுக்கு அனுமதி வழங்க இருக்கிறார். இதற்கு எந்தவித ஏலமும் விடவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்தப் பாகுபாடும் இல்லாமல், ரகசியமாக அனுமதி வழங்கியிருக்கின்றனர். இதற்கு கவர்னர் அனுமதி கொடுத்தால் அவர் மீதும் வழக்கு வரும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதுச்சேரி: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு; மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் அபராதம்

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் இடங்கள் சென்டாக் (CENTAC - Centralised Admission Committee) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2017-18 ஆண்டு சென்டாக் மூலம... மேலும் பார்க்க

புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கிரஸ் எம்.பி., தாக்கு

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பத்தைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்த... மேலும் பார்க்க

TVK Vijay : `ஆண்டு விழாவுக்கு முன்னதாக... உத்தரவிட்ட விஜய்’ - பரபரக்கும் த.வெ.க முகாம்!

தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருகிறது த.வெ.க தலைமை. அதுதொடர்பாக, கட்ச... மேலும் பார்க்க

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடி... மேலும் பார்க்க

``பதவிக்காக தமிழ்நாட்டையே பாஜக-விடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி!” - செந்தில் பாலாஜி காட்டம்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில்,”தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, ப... மேலும் பார்க்க