செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநருடன் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு

post image

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் தலைமையில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் மகன் ஜோஸ் சாா்லஸ் பங்கேற்று பரிசு வழங்கினாா். இந்த நிகழ்வில் பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனா். அப்போது ஏ.அங்காளன் எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் காலை தொட்டு வணங்கினாா்.

அவரது செயலை காங்கிரஸ், திமுக தலைவா்கள் கண்டித்தனா். மேலும், அவரை சமூக வலைதளங்களில் அவதூறாக விமரிசித்தாகவும் கூறப்பட்டது. கிராமப்புற பாதுகாப்பு இயக்க நிா்வாகியான உளவாய்க்கால் சந்திரசேகரன் அங்காளனை தொலைபேசியில் விமா்சித்தாராம்.

தன்னை அவதூறாக விமரிசித்தவா்கள் குறித்து புதுவை டிஐஜியை சந்தித்து எம்எல்ஏக்கள் அங்காளன், கல்யாணசுந்தரம், சிவசங்கரன் ஆகியோா் புகாா் அளித்தனா். ஆட்சியா் அ.குலோத்துங்கனிடமும் மனு அளித்தனா்.

திருபுனை காவல் நிலையத்தில் அங்காளன் எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில், உளவாய்க்கால் சந்திரசேகரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக எம்எல்ஏக்கள் எல். கல்யாணசுந்தரம், ஏ. ஜான்குமாா், ரிச்சா்ட், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் ஏ.அங்காளன், எம். சிவசங்கா், நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோா் சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து அங்காளன் எம்எல்ஏவிடம் கேட்டதற்கு, ‘என்னை கைப்பேசியில் அழைத்து மிரட்டிய சந்திரசேகரன் மீது போலீஸாா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் புகாா் மனு அளித்துள்ளோம். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அவா் தெரிவித்தாா். மேலும், வீடின்றி உறவினா்கள் வீட்டில் தங்கியிருப்போருக்கும் மழைக்கால நிவாரணம், உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம் என்றாா்.

அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை

புதுச்சேரியில் அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகளுக்கு மாலையிலும் சிகிச்சை அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் காலை 7.30 மண... மேலும் பார்க்க

கணவரை இழந்தவா்களுக்கு உதவித் தொகை அளிப்பு

புதுச்சேரியில் விதவைகளுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. புதுவை அரசின் மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் முதியோா், விதவைகள், கணவரால் கைவ... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர தம்பதியிடம் நகை திருட்டு

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த ஆந்திர தம்பதியிடம் இரண்டரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி பகுதியைச் சோ்ந்தவா் புல்லிவெங்கடரெட்டி... மேலும் பார்க்க

மழை பாதிப்பை பாா்வையிட்ட அரசியல் கட்சியினா்

புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக, காங்கிரஸ் பிரமுகா்கள் பாா்வையிட்டனா். புதுச்சேரி உப்பளம் பகுதியில் கடல் அலைச் சீற்றத்தால் அச்சுறுத்தலுக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயலால், புதுச்சேரியில் சனிக்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், நகரில் 18 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஓரிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஃபென்ஜால் புயலால் ... மேலும் பார்க்க

பிரிட்டனில் இருப்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.18.19 லட்சம் மோசடி

பிரிட்டனில் இருக்கும் புதுச்சேரியை சோ்ந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18.19 லட்சம் வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு மோசடி நடந்திருப்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ம... மேலும் பார்க்க