செய்திகள் :

புனே பாலியல் கொடூரம்: கரும்பு தோட்டத்தில் மறைந்திருந்த குற்றவாளி; மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் கைது!

post image

புனே ஸ்வர்கேட் பகுதியில் இருக்கும் அரசு பேருந்து நிலையத்தில், பேருந்துக்காகக் காத்திருந்த பெண் தனியாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சம்பவம் நடந்த பேருந்து நிலையத்தை அடித்து உடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறான தகவலை சொல்லி ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டு இருந்த பேருந்துக்குள் அழைத்துச் சென்று குற்றவாளி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இக்காரியத்தில் ஈடுபட்ட நபரைக் கைதுசெய்ய போலீஸார் 13 தனிப்படைகளை அமைத்தனர். இப்படைகள் மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்கு எதிரில் நடந்த இச்சம்பவம் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குற்றவாளியை உடனே கைதுசெய்ய, அவனைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்தனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரின் பெயர் தத்தாத்ரேயா ராம்தாஸ் காலே என்று தெரிய வந்தது. அந்த நபர் மீது ஏற்கெனவே திருட்டு, செயின் பறிப்பு என 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இதற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். தத்தாத்ரேயா புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் தாலுகாவில் இருக்கும் கிராமத்தில் கரும்பு தோட்டத்திற்குள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இரவில் அக்கரும்பு தோட்டத்தை போலீஸார் சுற்றி வளைத்தனர். மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கரும்பு தோட்டத்திற்குள் தத்தாத்ரேயாவை போலீஸார் தேடினர். நள்ளிரவில் போலீஸாரிடம் தத்தாத்ரேயா சிக்கினார். அவரைக் கைதுசெய்து புனே கொண்டு வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து தாக்கிய நபரும் மும்பை அருகே நள்ளிரவில்தான் கைதுசெய்யப்பட்டார்.

சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன?

நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக... மேலும் பார்க்க

Kumbh Mela: சிசிடிவிகளை ஹேக் செய்து வீடியோக்களை திருடி விற்கும் கும்பல்; விசாரணையில் பகீர் தகவல்கள்

உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நடைபெறும் பிரயக்ராஜ் நகரில் முழுவதும் ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோகள் விற்பனை செய்யப்படுவதாகச் ... மேலும் பார்க்க

வருஷநாடு: பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவசாயிகள்; கரடி தாக்கியதா என விசாரணை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருஷநாடு அருகே கோவில்பாறை பகுதியில் பஞ்சதாங்கி மலையடிவாரத்தில் இலவம், எலுமிச்சை, கொட்டை முந்திரி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருஷநாடு அருகே உள்ள தர்ம... மேலும் பார்க்க

`டிரஸ் போட மாட்டேன்’ - போலீஸ்காரரின் நிர்வாண அட்டூழியம்... வேலூரில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று... நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.கே.வி.குப்பம் அருகிலுள்ள நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என... மேலும் பார்க்க

Bengaluru : பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி - காவலரால் மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

'வேலியே பயிரை மேய்ந்தாற் போல' என்ற பழமொழியை போன்ற சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் விக்கி என்பவர் நண்பரை போன்று பழகி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து... மேலும் பார்க்க

சென்னை: ஆன்லைன் ஆர்டர்; டெலிவரி பாய் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் - நடந்தது என்ன?

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய பெண் ஒருவர், அவரின் வீட்டில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின... மேலும் பார்க்க