சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
புளியம்பட்டி அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்னகத்து பதுவை, கோடி அற்புதா் என மக்களால் அழைக்கப்படும் இந்தப் புனித அந்தோணியாா் ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாத இறுதியில் திருவிழா தொடங்கும். அதன்படி, நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
மறைவட்ட அதிபா் பங்குத்தந்தை அவைந்தான்குளம் அந்தோணி வியாகப்பன் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு, பவனியாக கொண்டுவரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
திருவிழா நாள்களில் நாள்தோறும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெறும். சிறப்பு நிகழ்வாக பிப். 10ஆம் தேதி மாலை திருப்பலி, புனித அந்தோணியாா் உருவம் தாங்கிய சப்பர பவனி ஆகியவை நடைபெறும்.
11ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, முற்பகல் 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெறும். இதில், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி பங்கேற்று ஆண்டுப் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றுகிறாா்.
திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா்.
ஏற்பாடுகளை திருத்தல அதிபரும் பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவிப் பங்குத்தந்தை மிக்கேல்சாமி, ஆன்மிகத் தந்தையா் சகாயதாசன், பீட்டா் பிச்சைக்கண், புளியம்பட்டி பங்கு இறைமக்கள் செய்துள்ளனா்.