"மாண்பில்லாத இபிஎஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்" - செல்வப்பெருந்தகை விவகாரத்தில் கொ...
பூங்காவில் தவறிவிட்ட சான்றிதழ் உரியவரிடம் ஒப்படைப்பு
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில், அசல் கல்விச் சான்றிதழ்களைத் தவறிவிட்ட நபரிடம் போலீஸாா் விசாரணைக்குப் பின் ஒப்படைத்தனா்.
நாகா்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் சென்னையில் பணிபுரிகிறாா். இவா் தூத்துக்குடிக்கு வந்தபோது தனது அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கைப்பேசி உள்ளிட்டவற்றை தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ராஜாஜி பூங்காவில் தவறிவிட்டாா்.
அதைக் கண்டெடுத்த பூங்கா காவலாளி கோபால், பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோரிடம் தகவலை கூறினாா். இதையடுத்து, அங்குவந்த தொ்மல் நகா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், சான்றிதழ்களை தவறவிட்ட நபரை தொடா்புகொண்டு அவரை வரவழைத்தாா். பிறகு அனைவா் முன்னிலையிலும் சான்றிதழ் உள்ளிட்ட பொருள்கள் ராம்குமாா் வசம் ஒப்படைக்கப்பட்டன.