செய்திகள் :

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

post image

பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.

இதையும் படிக்க: ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்திவைப்பு! ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

இந்த நிலையில், கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களி... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியல் தலைவர்... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு: இன்று முன்பதிவு தொடக்கம்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.இது குறித்த... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்து: ஒருவர் பலி; 14 பேர் மீட்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் இருந்த 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.இந்த சம்... மேலும் பார்க்க