செய்திகள் :

பெண்களை காரில் துரத்திய சம்பவம்: காவல் துறை விளக்கம்!

post image

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் தாம்பரம் மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே காரில் சென்ற பெண்களை, மற்றொரு காரில் வந்த சிலர், துரத்தும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்

இந்த் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் மாநகரக் காவல் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 26.01 2025 அன்று செல்வி. சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.01.2025 அன்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில்தான் (TN-13-S-5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.

அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி. சின்னி திலங்க் என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்னை செய்து அவர்களது காரை செல்வி. சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறி உள்ளார்கள்.

இதையும் படிக்க: சென்னை மெட்ரோவில் 'பார்க்கிங் பாஸ்' நிறுத்தம்! பயண அட்டையும் முடிவுக்கு வருகிறது!!

மேலும் மேற்படி காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி. சின்னி திலங்க் என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாகக் கூறியதை செல்வி. சின்னி திலங்க் தரப்பு மறுத்துள்ளது.

மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.01.2025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s126(2), 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயனபடுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார்? ஆளுநர் ரவிக்கு காங்கிரஸ் கேள்வி!

காந்தியின் இறப்பைக் கொண்டாடியது யார் என்று ஆளுநர் கூறுவாரா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.மகாத்மா காந்தியின் நிகழ்வுகள... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்து காணாமல்போன சிறுவன்! 2 ஆண்டுகள் கழித்து மீட்பு!

புது தில்லியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுவனை அம்மாநில காவல் துறையினர் தற்போது மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தில்லியிலுள்ள தனியார் தொண்டு நிறுவனத்த... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பது... மேலும் பார்க்க

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எத... மேலும் பார்க்க

அரிட்டாபட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை!

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதுரை அரிட்டாபட்டி சென்றுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மா... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.டோவினோ தாமஸ், திரிஷா நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படமான ஐடென்டிட்டி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக... மேலும் பார்க்க