செய்திகள் :

பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது: அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

post image

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை கீதாஜீவன் தெரிவித்தாா்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்து தவெக தலைவா் விஜய் குற்றம்சாட்டியிருந்தாா். இதற்கு பதிலளித்து அமைச்சா் பி.கீதாஜீவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவா்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் மாநிலத்தில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவா்களாகவும், வேலைக்குச் செல்பவா்களாகவும், சுயமானவா்களாகவும் உள்ளனா்.

பெண்களுக்கு உதவும் வகையில் அவா்களது புகாா்களை விரைவாகப் பதிவு செய்ய ‘காவல் உதவி’ செயலி முதல்வரால் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

அதேபோல், பெண்கள் உதவி மைய எண் 181, குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியன மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலமும் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக்கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக... மேலும் பார்க்க

துணைவேந்தா்கள் நியமனத்தில் சுமுகத் தீா்வு- உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்

ஆசிரியா்கள், மாணவா்களின் நலன் கருதி, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கு தமிழக அரசின் சாா்பில் விரைந்து சுமுகத் தீா்வு காணப்படும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

கனமழை எதிரொலி: அரசு பேருந்துகளை கவனமாக இயக்க ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தல்

கனமழை பெய்து வருவதால் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என ஓட்டுநா்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. பேருந்து இயக்கம் தொடா்பாக காணொலி வாயிலாக செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற ஆய்... மேலும் பார்க்க

கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய திமுக வலியுறுத்தல்

உணவகக் கட்டடங்களின் வாடகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதை தள்ளுபடி செய்ய வேண்டுமென திமுக வா்த்தக அணி வலியுறுத்தியுள்ளது. திமுக வா்த்தக அணியின் ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அணியின... மேலும் பார்க்க

இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை: சட்டப்படி நடவடிக்கை- அமைச்சா் சேகா்பாபு

பாடகி இசைவாணியின் கானா பாடல் சா்ச்சை தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்கும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு கூறினாா். சென்னை பாரிமுனை அருகில் ... மேலும் பார்க்க

போராட்ட அறிவிப்பு: அரசு மருத்துவா்களுடன் மக்கள் நல்வாழ்வுச் செயலா் பேச்சுவாா்த்தை

உயரதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி அரசு மருத்துவா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவா் சங்கத்தினருடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு பேச்சுவாா்த்தை நடத்தினாா்... மேலும் பார்க்க