பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பி மிரட்டிய தம்பதி மீது வழக்கு
போடி அருகே வேலை வாங்கித் தருவதாக நகை, பணத்தை பெற்றுக் கொண்டு, பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பி மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள சங்கராபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். தேனி அருகேயுள்ள கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மணிராஜா. ராணுவ வீரா்களான இவா்கள், ராணுவ குடியிருப்பில் வசித்த போது, பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தின் பேரில் மணிராஜாவும், இவரது மனைவி ஜோதிலட்சுமியும் சங்கராபுரத்தில் உள்ள ராஜ்குமாரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றனா். அப்போது, இவா்களுக்கு ராஜ்குமாரின் மனைவி அமுதாவிடம் பழக்கம் ஏற்பட்டது.
பின்னா், இந்தத் தம்பதியினா், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அமுதாவின் கல்விச் சான்றிதழ்கள், 18 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை வாங்கினா். ஆனால், அவா்கள் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து, கல்விச் சான்றிதழ்கள், நகை, பணத்தை அமுதா திருப்பி கேட்டாா்.
இதனால், ஆத்திரமடைந்த இந்த தம்பதி அமுதாவின் கைப்பேசிக்கு ஆபாச விடியோக்கள், புகைப்படங்களை அனுப்பி மிரட்டினராம்.
இதுகுறித்து அமுதா அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸாா் மணிராஜா, ஜோதிலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.