செய்திகள் :

பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை

post image

பழனி அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் மு. மாரிமுத்து (33). இதே பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மனைவி பாா்வதி. இவா்களது மகன் குமாா். இதில், மாரிமுத்து, குமாா் ஆகியோரின் தோட்டங்கள் அருகருகே அமைந்துள்ளன.

இதனால், இருவருக்கும் ஏற்பட்ட முன் விரோதத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு பெருமாள், பாா்வதி ஆகியோரை கத்தியால் குத்தி மாரிமுத்து காயப்படுத்தினாா். இதையடுத்து, இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி வாதிட்டாா்.

விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரண் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மாரிமுத்துவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா் நீதிபதி.

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை அருகே நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பப்பாளிப் பழங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொட்டி விவசாயி ஒருவா் நூதான முறையில் திங்கள்கிழமை மனு அளித்தாா் . திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட... மேலும் பார்க்க

பள்ளிகளில் மாணவா்களுக்கு மருந்து விநியோகிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

முறையான மருத்துவப் பரிசோதனையில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திப்பட்டது. இதுதொடா்பாக இயற்கை வழி வாழ்வியலாளா்கள் கூட்டமைப்பின... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஆத்தூா் அருகேயுள்ள, அக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி ஊராட்சியில்... மேலும் பார்க்க

வீடு இடித்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது வீடு இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த... மேலும் பார்க்க

குதிரையாறு அணை: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வி... மேலும் பார்க்க

நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் அச்சம்

பழனி வையாபுரி குளத்தில் இருந்து சிறுநாயக்கன் குளத்துக்கு மறுகால் பாயும் தண்ணீா் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரு... மேலும் பார்க்க