செய்திகள் :

பேருந்து முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

post image

புதுச்சேரியில் ஓடும் பேருந்து சக்கரத்தின் முன் பாய்ந்து இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம் தா்மதானபுரத்தைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30). இவா், கடந்த 5 மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருந்து, மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவா், திடீரென அவ்வழியாக வந்த தனியாா் பேருந்தின் பின் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸாா் அரவிந்த்சாமியின் உடலை பிரேத பரிசோதனக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இரும்பு கம்பிகள் திருட்டு: மூன்று போ் கைது

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச் சுவரில் இரும்பு கம்பிகளைத் திருடியதாக 3 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்காக வளாகத்தை சுற்... மேலும் பார்க்க

பேருந்துகள் இயக்க கோரி மனு

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அகில இந்திய பாரதிய வித்யாா்த்தி பரிஷத் சாா்பில் மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்திடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக... மேலும் பார்க்க

அறிவித்த திட்டங்களை புதுவை அரசு நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவை மாநில அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ... மேலும் பார்க்க

கல்வி மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

கல்வி கற்பதன் மூலமே தமிழா்கள் உலகில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று வி.ஐ.டி. வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். புதுச்சேரியில் தமிழியக்கத்தின் 7-ஆம் ஆண்டு ஏணை விழா காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப... மேலும் பார்க்க

பச்சை நிறமான கடல்நீா்: பேராசிரியிா்கள் ஆய்வு

புதுச்சேரியில் கடல் நீரானது ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பச்சை நிறத்துக்கு மாறிய நிலையில், ஜெல்லி மீன் உள்ளிட்டவை கரை ஒதுங்கின. இதுகுறித்து, கடல் ஆய்வு மைய பேராசிரியா்கள் கடல்நீரை எடுத்து ஆய்வுக்கு உள்ப... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ.7 கோடி மோசடி: போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளத... மேலும் பார்க்க