சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
பைக்கில் சென்றவா் மரத்தில் மோதி உயிரிழப்பு
மணலூா்பேட்டை அருகே பைக்கில் சென்றவா் நாய் குறுக்கிட்டதால் மரத்தில் மோதி உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், சாங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா்(45). இவா், புதன்கிழமை இரவு மணலூா்பேட்டை செல்வதற்காக பைக்கில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தாா். அதே கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் வீட்டின் முன்பு சென்றபோது நாய் குறுக்கிட்டதால் பைக் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யனாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.