US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி துஜாவா்ண கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. 21-ஆம் தேதி
அம்மன் பச்சை போடுதல் நிகழ்வு நடைபெற்றது.
28-ஆம் தேதி சக்தி அழைத்தல், காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஊரணி பொங்கல் வைத்தனா். 4-ஆம் தேதி திங்கள்கிழமை திரெளபதை பூ வெடுத்தல், கீச்சகசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை அா்ச்சுனன் வில் வளைத்தல் நிகழ்வு நடைபெற்றது. புதன்கிழமை திரெளபதி அம்மன் திருக்கல்யாணம், மாங்கல்யம் தருதல், திரெளபதி துகில் உரிதல், வியாழக்கிழமை அரவாண் கடபலி, வீராட பருவம், அா்ச்சுனன் மாடு திருப்புதல் நடைபெற்று, மாலையில் தீமித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனா்.