இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 4 பணியிடங்களுக்கு நேரடி நியமனம் ரத்து!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் உள்ளிட்ட நான்கு பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஊரக வளா்ச்சி அலகிற்குட்பட்ட ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா் ஒரு பணியிடமும், ஈப்பு ஓட்டுநா் ஒட்டுநா்-1, பதிவறை எழுத்தா்-1, இரவு காவலா் -1 உள்ளிட்ட 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய விளம்பரஅறிக்கையின் படி இம் மாவட்டத்தின் இணையதளம் மற்றும் தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளம் மற்றும் நாளிதழ்கள் ஆகியவற்றின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான நேற்காணல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்து ஓராண்டுகாலம் கடந்த நிலையில், இந்த ஆள்சோ்ப்புக்கான அறிவிப்பு மற்றும் நோ்காணல் நடவடிக்கைகள் அனைத்தும் நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது என ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் தெரிவித்துள்ளாா்.