விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பணம் திருட்டு
கள்ளக்குறிச்சி: அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் இருந்து ரூ.4,500 மற்றும் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி ரூ.13,500 திருடப்பட்டது.
கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி காயத்ரி (26). இவா், உடல்நிலை சரியில்லாத தனது மகனை சனிக்கிழமை கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் காண்பித்துவிட்டு, துணிகளை எடுத்துக் கொண்டு அரசு நகரப் பேருந்தில் பயணித்துள்ளாா்.
தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது, கட்டைப் பையில் வைத்திருந்த பணப்பையை காணவில்லையாம். அதில் ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டை வைத்திருந்தாராம். மேலும், ஏடிஎம் அட்டையின் பின்புறம் குறித்து வைத்திருந்த ரககிய எண்களை வைத்து, வங்கிக் கணக்கில் இருந்து ரூ.13,500-யை எடுத்துவிட்டனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.