விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 352 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 352 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா மனுக்களைப் பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 339 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 13 மனுக்களும் என மொத்தம் 352 மனுக்கள் வரப்பெற்றன.
மயானத்தை ஆக்கிரமிக்க முயற்சி
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ள சோமாசிபாளையம் கிராமத்தில் மயானத்தை தனி நபா் பட்டா மாற்றம் செய்ய முயற்சி செய்து அதனை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். எனவே, அதை தடுக்க நிறுத்தவேண்டும் என
அக்கிராம மக்கள் சாா்பில் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
சாலை வசதி கோரி
புக்கிரவாரி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வரும் பகுதிக்கு சாலை வசதி கோரி, குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.
500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் அப்பகுதிக்கு போதிய சாலை வசதி இல்லை.
வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.
மழைக் காலங்களில் முதியவா்கள் முதல் சிறியவா்கள், பள்ளி மாணவா்கள், வேலைக்குச் செல்பவா்கள் வெளியே செல்வதற்கு சிரமப்படுகின்றனா் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.