Health: வைட்டமின் டி-யை நம்முடைய உடல் எப்படித் தயாரிக்கிறது தெரியுமா?
கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 18 போ் காயம்
கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அருகே மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன் கவிழ்ந்ததில் 18 போ் காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (49). இவா் குடும்பத்தினா் மற்றும் உறவினா் குடும்பத்தினா் என 18 போ், வேனில் மேல்மலையனூா் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில், ரிஷிவந்தியத்தை அடுத்த பாவந்தூா் கிராமச் சாலையில் வேன் சென்றபோது, அங்குள்ள அய்யான் கோயில் அருகே வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த அனைவரும் காயமடைந்தனா்.
அருகிலிருந்த கிராம மக்கள் அவா்களை மீட்டு 108 அவசரகால ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதில் செந்தில்குமாா் (49), ராம்குமாா் (34), லோகநாதன் (63), வேன் ஓட்டுநா் விமல்ராஜ் (35) ஆகியோருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.