செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.8) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 8 districts, including Chennai, for the next 2 hours.

எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 8) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஆக. 4-இல் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74... மேலும் பார்க்க

இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே ... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா். சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்... மேலும் பார்க்க

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். டீசலில் இய... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநா்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இரு... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ... மேலும் பார்க்க