8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 8) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஆக. 4-இல் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74,360-க்கும், ஆக. 5-இல் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,960-க்கும், ஆக. 6-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, வியாழக்கிழமை(நேற்று) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,400-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.75,200-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,470-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால், மக்களிடையே சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி!