J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்க...
டெல்லி: வாகனங்களை நிறுத்துவதில் தகராறு - பாலிவுட் நடிகை ஹுமா குரேஷின் சகோதரர் படுகொலை
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆசிப் குரேஷி, டெல்லி நிஜாமுதின் பகுதியில் வசித்து வந்தார். ஆசிப் குரேஷி வீட்டிற்கு வெளியில் பக்கத்து வீட்டுக்காரர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அந்த வாகனத்தை அங்கிருந்து எடுக்கும்படி பக்கத்து வீட்டுக்காரரிடம் ஆசிப் கேட்டுக்கொண்டார்.
இதனால் ஆசிப்பிற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பக்கத்து வீட்டுக்காரர் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதத்தால் ஆசிப்பை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆசிப் சுருண்டு விழுந்தார். அவரை அவரது மனைவி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.

இருவருக்கும் இடையே இதற்கு முன்பும் இதே போன்ற வாகன பார்க்கிங் பிரச்னையில் தகராறு ஏற்பட்டு இருந்தது. இதனால் இருவரும் சரியாக பேசிக்கொள்வதில்லை. இது குறித்து ஆசிப் மனைவி சாய்னாஸ் குரேஷி கூறுகையில், ''சிறிய பிரச்னையில் எனது கணவரை பக்கத்து வீட்டுக்காரர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் எங்களது வீட்டுக்கு வெளியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதனை அங்கிருந்து எடுக்கும்படி படி எனது கணவர் கேட்டுக்கொண்டார். ஆனால் வாகனத்தை எடுப்பதற்கு பதில் எனது கணவரை பக்கத்து வீட்டுக்காரரும், அவரது நண்பரும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதோடு அவரை தாக்கி கூரிய ஆயுதத்தால் தாக்கினார்''என்று தெரிவித்தார்.
ஆசிப்பை தாக்கிய இருவர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்கள். அவர்களை போலீஸார் தேடி கண்டுபிடித்து கைது செய்து என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வடமாநிலங்களில் அடிக்கடி பார்க்கிங் பிரச்னை மற்றும் லிப்டில் ஏறுவது தொடர்பான பிரச்னையில் மோதல் ஏற்பட்டு வருகிறது.