பாகிஸ்தான், இஸ்ரேல் வரிசையில் கம்போடியா - ட்ரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரை - கா...
Lokesh Kanagaraj: `இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' - லோகேஷ் கனகராஜின் எமோஷ்னல் பதிவு
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது தனது அடுத்த பிரமாண்ட படைப்பான 'கூலி' படத்தின் வெளியீட்டிற்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அனிருத்தின் இசையில் ஏற்கெனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில், இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகரஜ் தன் எக்ஸ் பக்கத்தில், ``என்னுடைய தொழில் வாழ்க்கையின் முதல் நாள் முதல் இன்று வரை என்னுடைய தூண்களைப் பற்றி குறிப்பிட இதுவே சரியான தருணம். அவர்கள்தான் அன்பறிவு. நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னைப் பார்க்க அவர்கள் எப்போதும் விரும்பினார்கள்.
உங்களை என்றும் நேசிக்கிறேன்
என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்கள் எப்போதும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்! அதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் நீங்கள் இயக்குநர்களாகுவதைக் காண நான் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன்! உங்களை என்றும் நேசிக்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கின்றார்.

அன்பறிவ்:
தக்லைஃப் படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனரான அன்பறிவ் மாஸ்டர் இயக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அன்பறிவ் கே.ஜி.எஃப் தொடங்கி லியோ, தசரா, ஆர்.டி.எக்ஸ், சலார், அயலான் எனப் பல வெற்றி திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகளை இயக்கியவர்கள். இவர்கள் இயக்கும் இந்த முதல் படத்தை, ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...