செய்திகள் :

என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | #Chennaidays

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

நான்‌ பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையின்‌ புறநகர் பகுதியில் தான்.  கடிதத்தின்‌ முகவரியில், pincode எழுதும் இடத்தில் தான்‌ சென்னை என‌ எழுதுவோம். மற்றபடி எல்லா வசதிகளையும் கொண்ட , போக்குவரத்து நெரிசல் இல்லாத புறநகரில் தான் வாழ்க்கை. முடிந்த அளவிற்கு எங்கு சென்றாலும் நடராஜா சர்வீஸ் தான்.. இல்லையென்றால் சைக்கிள்,  அதுவும் இல்லையென்றால் ரிக் ஷா சவாரி.. ஆட்டோ அண்ணாக்கள் எல்லாம் அப்போது இல்லை. ஏரியாவில் காரை பார்ப்பது கடினம். ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவிற்கு செல்ல எலக்ட்ரிக் ட்ரெயினும், பல்லவன் சர்வீஸ் பஸ்சும் எப்போதும் இருக்கும்.

உறவினரின் வீடு திருவல்லிக்கேணியில் இருந்ததால் அங்கு  செல்லும்‌ போதெல்லாம் கட்டாயம் செல்லும் இடங்கள் பீச் மற்றும் பார்த்தசாரதி கோவில். 

சித்தரிப்புப் படம்

பள்ளியில் சுற்றுலா என்றால் அழைத்துச் செல்லும் இடங்கள், வள்ளுவர் கோட்டம், சுற்றுலா பொருட்காட்சி, காந்தி மண்டபம், கிண்டி நேஷனல் பார்க்..‌அதுவும் கிண்டி பார்க்கில் உள்ள பெரிய சறுக்கு மரம் ஏறி சறுக்குவது அப்போதைய bucket list ல் முதல் இடத்தைப் பிடித்திருந்தது... ஏழாவது , எட்டாவது வகுப்பு என‌ வந்து விட்டால் மகாபலிபுரம் இந்த வரிசையில் வந்து சேரும்.  

சிறு வயதில் மெட்ராஸ் என்றால் இவ்வளவுதான் தெரியும். இப்போது எல்லோரும் அலுத்துக் கொள்வது  போல் , ஐயோ ..சென்னையா!! ஒரே வெயில், எங்க பாத்தாலும் கூட்டம், டிசம்பர் ல சென்னைல இருக்கவே கூடாது,  பக்கத்து வீட்ல யார் இருக்காங்கன்னு கூட கண்டுக்க மாட்டாங்க போன்ற புலம்பல்களை கேட்காமல் , சென்னை நான்‌ பிறந்து , வளர்ந்த ஊர் ..அவ்வளவுதான் என்ற மட்டில் தான் நான் பத்து வருடங்களுக்கு முன் வரை இருந்தேன். 

என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்கள் வரை சென்னை என்ற‌ நகரத்தை விட்டு நான் வேறு எங்கும் சென்று‌ நெடுநாட்கள் தங்கியதில்லை.  எப்போதும் எனக்கு இந்த ஊர் அலுப்பைத் தந்ததில்லை.

சென்னையின்‌ புறநகரில் தங்கி இருந்தபோதும், கல்லூரி படிப்பிற்கு மௌன்ட் ரோட் வரை பயணம் செய்தேன். என் ஏரியாவில் இருந்து எக்மோர் வரை மின்சார ரயிலில் பயணம், பின் இரண்டு மூன்று ஸ்டாப் தள்ளி இருக்கும் கல்லூரி செல்ல பஸ் என சென்னையைச் சுற்றியிருக்கிறேன்.‌

ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மென்ட் வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது. அதிகாலையில் எழுந்து குடும்பத்திற்காக வேலை செய்து அவசர அவசரமாக கிளம்பி, ரயில் ஏறி , சீட் பிடித்து அமர்ந்து , கொஞ்சம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் , தினம் தினம் கூடவே பயணிக்கும் தோழிகளிடம் கதை பேசி , இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்ததும் டாடா சொல்லியபடியே, அலுவலகம் செல்லும் பெண்மணிகள் சென்னையின் சுறுசுறுப்பிற்கும், பரபரப்பிற்கும் இன்றும் உதாரணங்கள்.  

சாலையோர ஆட்டோ மையங்கள், இவை வந்த பிறகு பயணங்கள் கொஞ்சம் எளிதானது.  பல்லவன் பஸ் ட்ரைவர்களும், ஆட்டோ அண்ணாக்களும் அண்ணா சாலையையும்,  தி.நகரையும், அண்ணா நகரையும், கோடம்பாக்கத்தையும் போக்குவரத்தில் அனைவரையும் சிக்க வைத்தார்கள்..

பிறகு வந்த சேர்ந்த மேம்பாலங்களும், மெட்ரோ ரயில்களும்,சென்னையை இன்னமும் அழகு படுத்தின.  எந்நேரமும் உழைக்கும் மக்கள், எங்கெங்கோ இருந்து பிழைக்க வழி தேடி தினம் தினம் வந்து தஞ்சமடையும் மக்கள், கோலிவுட்டில்   தன்னை இணைத்துக் கொள்ளத் துடிக்கும் ஏராளமான கலைஞர்கள் என சென்னை எப்போதும்  கலர் ஃபுல் நகரமாகத்  தான் இருந்து கொண்டிருக்கிறது.

 சென்னையின் முக்கிய அம்சங்களில், தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என இன்றளவும் பலவற்றை சுட்டிக்காட்டலாம்.

ஏழை மக்கள், நடுத்தர வர்க்கம், உயர்தர குடும்பங்கள்,, யாருக்கு என்ன தேவையோ,அது இங்கே கிடைக்கும்.  ரோட்டுக் கடை இட்லி முதல்,  ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இட்லி வரை , கையில் இருக்கும் காசுக்கேற்ற உணவு இங்கே பிரபலம்..  ஆர்டர் செய்தால் ஆல் டைம் கிடைக்கும்..

இவற்றை எல்லாம் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த போது  ரசித்தேனா என நினைவினில் இல்லை.  ஆனால் சென்னையிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகி போனதில், chennai. I miss you a lot ..‌என்றே‌ ஏங்க வைத்தது..

ஏதாவது வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்து‌ப்போவது உண்டு. அப்போதெல்லாம், திருமணமாகி  பிறந்த வீட்டிற்கு ஒரு பெண் வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி எந்த அளவிற்கு இருக்குமோ, எனக்கும் அதே மகிழ்ச்சியை ஒட்டு மொத்த சென்னையும் வாரி வழங்கி விடும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும் | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பந்தம்! - எழுத்துலகில் நான் கண்ட வெளிச்சம் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரம், அறம், காதல், துரோகம் - என் மனதில் பதிந்த தருணங்கள் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரே அறையில் 16 நபர்கள்! - சென்னை என்னும் மாமரம் வாழ்வு தந்த கதை| #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தித்திக்கும் சென்னை... என் கனவு, என் வாழ்க்கை! | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க