செய்திகள் :

ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும் | #Chennaidays

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சிறகில்லாத பறவை மனிதர்கள் தான் , ஆம் பிறந்து பள்ளிக்கூடம், கல்லூரி, வேலை என்று பல அனுபவங்கள் பெற இறக்கையின்றி வானில் பறக்காமல் தரையில் நகர வேண்டும் மனிதன் புது அனுபவங்களை பெறும் பறவையாக . 

  உலக புகழ் பெற்ற தேசாந்திரி ‘ராகுல் சாங்கிருத்தியாயன்’ ஒரு மனித பறவையே வாழ்வில் பல அனுபவம் வேண்டி உலகம் முழுக்க சுற்றித் திரிந்தவர். இந்திய மனிதர்களின் ஆதிகால் குணம் கலாச்சாரங்கள் பற்றி அவர் சுற்றி சேகரித்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தில் குறிப்பிட்ட செய்திகள் ஏராளம் . எதிர்கால மக்களுக்கு ‘ராகுல் சாங்கிருத்தியாயன்’ அவர்கள் சுற்றித்திறிந்து பெற்ற அனுபவம்தான் நம் முன்னோரை திரும்பி பார்க்க சாட்சி .

உலகத்தில் ஜாதி , மதம் , மனிதர்களை விட்டு மறைய இலக்கியங்களும் , தீராத பயணங்கள் மட்டுமே உதவும் . என் வாழ்விலும் மெட்ராஸ்க்கு நான் மேற்கொண்ட பயணமே பல நல்ல மாற்றாங்களை தந்தது . மெட்ராஸ் எனக்கு தந்தது நல்ல அனுபவம் மட்டுமே .

 இன்று நான் என் 27 வயதில் மெட்ராஸ் கொடுத்த நண்பர்கள் என்னை  தூக்கிப்பிடிப்பதால் தான் இன்று நான் தலை நிமிர்ந்து  இருக்கிறேன் என் வாழ்வில். 

          கோவையில் ஒரு நூலகத்தில் முகமறியாத யாரோ ஒருவர் அறிமுகப்படுத்திய ‘ஆனந்த விகடனால்’தான் எனக்கும் ‘மெட்ராஸ்’க்குமான  முதல் அறிமுகம். ஆம் அதில் பல சினிமா பிரபலங்கள் , இலக்கியவாதிகள் , அறிமுகம் செய்து வைத்த புத்தகங்களை 10% விலைக்கழிவுடன் பெற்று வாசித்த அனுபவம் எனக்கு மெட்ராஸின் ‘பனுவல்’ புத்தகக்கடை மூலமாகத்தான்.

எனது ஊரில் விகடனில் பலர் அறிமுகப்படுத்தும் புத்தகங்களை நான் பட்டியலிட்டு கோவையில் பிரபலமான ஒரு கடையில் சென்று 2000ரூபாய்க்கு மேல் கணக்கு வந்தும் கூட ஒரு ரூவா கூட எனக்கு விலைக்கழிவு கிடைக்கவில்லை அந்த கடையில். எந்த புத்தகங்களை வாங்கமலேயே வந்துவிட்டேன் . சில நாட்கள் கழித்து முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் மூலம் ‘பனுவல்’ பற்றி தெரிந்து அங்கு பல புத்தகங்கள் விலைக்கழிவுகளோடு இன்று வரைக்கும் வாங்கி வருகிறேன் நட்போடு.

கொரோனா காலகட்டம் முடிந்து 1வருடத்திற்கு மேல் ஆகியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை , அதற்கு முன்னர் நான் எனது ஊரில் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காமல் கனவுகளோடு சின்ன சின்ன வேலைகள் செய்திருக்கிறேன் . 1 வருடம் காலம் கழித்து பெற்றவர்கள் கை விட்டாலும் நம்மை தாங்கி பிடிக்க உலகமே இருக்கும் அதுபோல் என் ஊரில் வேலை கிடைக்காத எனக்கு மெட்ராஸில் தனியார் அலுவலகத்தில் வேலை கிடைத்தது . எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை , ஆனால் எதிர்பார்த்ததை விட மிக அதிக சம்பளத்தோடு வேலை கிடைத்தது மெட்ராஸில் . 

 எந்த வித உறவுகளும் இன்றி ‘மெட்ராஸில்’ தனியார் அலுவலகத்தில் பேச்சிலராக நான் இருந்த போது தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தேன் , அந்த வீட்டின் ஓனர் 4நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். மெட்ராஸில் உடன் வேலை பார்த்த நண்பர்கள் உதவியோடு புது வீடு கிடைத்தது வாடகைக்கு . புது வீட்டின் ஓனர் அவர்கள் வீட்டின் நிகழ்ச்சிகளில் என்னை அழைத்து சாப்பாடு போட்டு உபசரிப்பர் .

முதலில் அவர் வீட்டில் சென்று சாப்பிட கூச்சமாக இருந்தது, காரணம் எங்கள் வீட்டில் நாங்களும் வீட்டை வாடகைக்கு வைத்திருக்கிறோம் , சில நேரம் பேச்சிலர்களுக்கும் வீடு தந்தோம் ஆனால் ஒரு போதும் எங்கள் வீட்டில் இருந்த பேச்சிலர்களை எந்த நிகழ்வுகளிலும் சாப்பிட கூப்பிட்டது இல்லை . மேலும் ஓனர்  அக்கம் பக்கத்து வீடுகளில் ஏதேனும் விஷேசங்கள் , ஓனரின் உறவுக்காரர்களின் வீட்டில் ஏதும் நிகழ்ச்சி என்றால் என்னை அங்கு அழைத்து செல்வர்.

       வேலைக்கு மெட்ராஸில் சேர்ந்து ஒரு வருட காலம் கழித்து என் கனவு சினிமாவில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தது . சாலிகிராமம் , அம்பத்தூர் , டிநகர் , திருவள்ளூர் , அரக்கோணம் என்று மெட்ராஸ் மற்றும் மெட்ராஸை சுற்றிய பல இடங்களுக்கு நான் சேகரித்த அனுபவங்கள் ஏராளம்.

மெட்ராஸில் உதவி இயக்குனராக காலத்தை ஓட்டுவது என்பது மெட்ராஸ் புயலில் ஏற்படும் வெள்ளம் போல் கொடுமையானது . பிளாட்பார்ம் டிக்கட் எடுத்துக்கொண்டு இரயில் நிலையங்களில் நான் செலவழித்த நாட்கள் ஏராளம் . மெரினாவில் மாலை வெயில் மறையத்துவங்கி இரவு ஆகி ஆட்கள் மறைந்தும் எங்கும் நட்சத்திரங்களும் , காற்றின் சத்தமும் , கடல் அலையின் இறைச்சல் சத்ததோடு , நிலாவோடு கைகோர்த்து (வானில் இருக்கும் நிலா) எத்தனையோ நாட்கள் சுற்றித்திறிந்து இருக்கிறேன் .  

       உணவு பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கும் , ஆனால் மெட்ராஸில் பல சின்ன சின்ன வீட்டுக்கடைகளில் உணவு உண்டு பல அக்காக்கள் , அம்மாக்கள் அன்பினால் உலக வங்கியில் இந்தியர்களின் மேல் இருக்கும் கடனை விட நான் சாப்பிட்ட இட்லிக்கடன் அதிகமாக இருக்கலாம் .

என்னை பெற்றெடுத்தது ஒரு தாய்தான் .  ஆனால் மெட்ராஸ் எனக்கு தந்த அம்மாக்கள் , அக்காக்கள் , அண்ணன்கள் ஏராளம் (காதலி மட்டும் இன்னமும் தர வில்லை) என்பது எனக்கு மட்டும் வருத்தமான ஒன்று .  

 தினமும் காலையில் எழுந்து  உதவி இயக்குனராக வேலைக்கு செல்லும் போது  பல கடை வாசல் சின்ன சந்துகள் , கோவில் வாசல் இவற்றை நன்கு பார்த்தபடியே செல்வேன், இந்த இடங்களில் எங்கேயாவது இன்று  சாதித்தவர்களின் கனவுகளோடு காலடிகள் பட்ட பல இடங்களில் எனது காலடியும் பட்டிருக்கும் , மெட்ராஸில் ஒரு வேலை உணவின்றி என்ன செய்வது என்று அறியாமல் ஏதோ தெருவில் குழம்பியபடி இன்று மெட்ராஸில் சாதித்த யாரோ ஒருவர் நின்றிருக்கலாம் , நானும் அவர் நின்ற அதே இடத்தில் குழப்பத்தோடு நின்றிருக்கலாம் .  

         பல கனவுகளோடும் தெளிவான திட்டங்களோடும் , கடும் உழைப்பையும் ,மூளையையும் மூலதனமாக போட்டவர்களை வந்தவர்களை மெட்ராஸ்  அவர்களுக்கான உயரத்தை சமூகத்தில் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. நானும் மெட்ராஸின் கைபிடித்துதான் கனவுகளோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன் நிச்சயமாக விரைவில் எனக்கான இடத்தை மெட்ராஸ் அமைத்துக் கொடுக்கும் ஏனென்றால் மெட்ராஸ் எனக்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தி வைத்த நல்ல  நண்பர்கள் , இலக்கியவாதிகள் ஏராளம் .

நான் பேச்சிலராக மெட்ராஸில் இருந்த போது ஓனர் அவரின் வீட்டில் எனக்கு பல முறை உணவு போட்டிருக்கிறார் அவரின் மொத்த குடும்பமும் பரிமாறும் என் ஒருவனுக்கு.  மெட்ராஸில் பல முறை எனக்கு உணவு போட்ட என் ஓனர் குடும்பம் எனக்கு  காட்டிய அன்பு எனக்கு காயமாகத்தான் இருக்கிறது அந்த காயம் இப்போது ஆறாது எனக்கு . எங்கள் வீட்டில் இப்போது ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. ஏதேனும் வரும் காலத்தில் பேச்சிலர்கள் எங்கள் வீட்டிற்கு குடி வந்தால் ஒரு முறை ( அல்ல ) பல முறை உணவு உபசரிக்க வேண்டும் அப்போதுதான் மெட்ராஸ் மக்கள் எனக்கு தந்த காயம் அன்பாக பேரன்பாக மாறும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

டிஸோ மோரோரிக்கு ஒரு சாகசப் பயணம் - இமயத்தின் off-roading அனுபவம் | திசையெல்லாம் பனி -10

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என் வாழ்வில் முதல் நாற்பது வருடங்களை அழகாக்கிய சென்னை - பூர்வக்குடியின் அன்பு | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பந்தம்! - எழுத்துலகில் நான் கண்ட வெளிச்சம் | #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வீரம், அறம், காதல், துரோகம் - என் மனதில் பதிந்த தருணங்கள் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஒரே அறையில் 16 நபர்கள்! - சென்னை என்னும் மாமரம் வாழ்வு தந்த கதை| #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க