பள்ளி மாணவர்களின் மனநலனுக்கு உதவுமா சினிமா தெரபி?
ஒருவேளை அந்த ஆஸ்ட்ராய்ட் இந்த உலகத்தை மோதவே இல்லை என்றால்... எல்லா டைனோசரும் உயிரோடு இருந்திருந்தால்... இப்போ அவங்க என்னவா இருந்திருப்பாங்க..? டைனோசர் எல்லாம் சேர்ந்து விவசாயம் பண்ணுனா எப்படி இருந்திருக்கும்..? டைனோசர் எல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமா - அப்பா, அம்மா, குழந்தைகள் அப்படின்னு சேர்ந்து வாழ்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? இதெல்லாம் நம்மளுடைய நிஜ வாழ்க்கையில பார்க்க முடியாது அல்லவா...? இதையெல்லாம் ஒரு கற்பனை கதையாக எடுத்த படம்தான் ’தி குட் டைனோசர்.’

குட் டைனோசரின் முக்கிய கதாபாத்திரம் ’ஆர்லோ’ என்ற ஒரு குட்டி டைனோசர்தான். படம் தொடங்கும்போது இந்த குட்டி டைனோசர் ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், படம் முடியும்போது அவனுக்கு ஏற்பட்ட சவால்களும் சூழ்நிலைகளும் எப்படி ஆர்லோவை தைரியமானவனாக மாற்றுகின்றன என்பதுதான் கதைக்கரு. அவனுடனே ’ஸ்பாட்’ என்கிற ஒரு குட்டி மனிதக் குழந்தையும் காட்டுக்குள்ளே இருக்கும். இந்த இரண்டு குழந்தைகளுடைய நட்பும், பயணமும், மேம்படுத்தலும்தான் இந்த கதை. ஆர்லோ அடைகிற தன்னம்பிக்கையை ’கேரக்டர் ஆர்க்' என்போம். இதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், ஜர்னலிசம் டிபார்ட்மெண்ட் சார்பில் சில தினங்களுக்கு முன்னால், பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவதற்காக நடைபெற்ற ’சினிமா தெரபி’யைப்பற்றி விவரிக்கத்தான். இந்நிகழ்வு ஆய்வு நோக்கத்தில் நடத்தப்பட்டது.
’’சினிமா மூலம் குழந்தைகளுக்கு ‘inner self’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் பர்சனாலிட்டி டெவலப்மென்டுக்காக சினிமாவும் பயன்படும் என்பது அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான். அதுதான் சினிமா தெரபி’’ என்கிறார் இளம்பருதி. இவர், 10 ஆண்டுகளாக துணை பேராசிரியராக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.
இந்தியன் கவுன்சில் ஆஃப் சோசியல் சயின்ஸ் ரிசர்ச் (ICSSR) என்ற அரசாங்க இயக்கத்துடன் சேர்ந்து, இரண்டு வருட புராஜெக்டாக ’சினிமா தெரபி’ என்ற தலைப்பில் குழந்தைகளுடன் இணைந்து மென்டல் ஹெல்த் குறித்த ஒரு ரிசர்ச் செய்வதற்காக ஒரு திட்டத்தை இவர் மேற்கொண்டு வருகிறார்.

’’தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மாணவர்களை வரவழைத்து, அவர்களிடம் படம் ஒன்றை திரையிடுவதற்கு முன்பும், பின்பும் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து, பதில் அளிக்க வைத்து, அவர்களிடம் திரையிடப்பட்ட படம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பதிவு செய்து, ஒப்பிட்டுப் பார்க்கவே இந்த ரிசர்ச் நடைபெறுகிறது.
மாணவர்களுடைய மனநிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு, பள்ளி மற்றும் கல்விக்கூடங்களில் அமைப்பு ஒன்று உருவாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி ICSSR உடன் இணைந்து தோராயமாக ஆயிரம் குழந்தைகளுடன் இந்த சினிமா தெரபியை செய்து பார்த்து, ’குழந்தைகளுக்கான மென்டல் ஹெல்த் ரெகுலேட்டரி மாடல்’ ஒன்றை உருவாக்குவதே இந்த சினிமா தெரபியின் நோக்கம்.
டைனோசர் எல்லாம் சேர்ந்து ஒரு குடும்பமா - அப்பா, அம்மா, குழந்தைகள் அப்படின்னு சேர்ந்து வாழ்ந்திருந்தா எப்படி இருந்திருக்கும்..? இதெல்லாம் நம்மளுடைய நிஜ வாழ்க்கையில பார்க்க முடியாது அல்லவா...? இதையெல்லாம் ஒரு கற்பனை கதையாக எடுத்த படம்தான் ’தி குட் டைனோசர்.’
மேலும் குழந்தைகளுக்கான படங்களை ஆராயும்போதுதான், குழந்தைகளுக்காக எந்தப் படமும் பெரிதளவில் உருவாக்கப்படவில்லை. குழந்தைகளை மையமாகக் கொண்ட படங்கள் பெரும்பாலும் பெற்றோர்களைப்பற்றி பேசுவதாகவே உருவாக்கப்படிருக்கின்றன என்பது தெரிந்தது” என்கிறார் இளம்பருதி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...